Thursday, May 23, 2013

துயரில் வேகுதல்






ஆக்காட்டி நான் அழுத துயர் கேட்டீர்,
பூக்காட்டோரத்தில் 
தாயதி பூமியை காடழித்து 
வாழ்பதியமைத்து
வாழ்ந்துவந்தபரம்பரை  நான்.

புண்ணியனார் கரம் பற்றி 

நான் பெற்றபிள்ள  நான்கு.
சின்னவயதிலொன்று குளிரெழும்பி இறந்துபோக
வளர்ந்தது மூன்று.

;துப்பாக்கி தின்று

என்மன்னர் இறந்துபோக 
பிள்ளைகளை
வளர்க்க நான் பட்டபாடு  
நானறியேன் வேறுயாரு என்போல..

போர்ப்பறையெழ புறப்பட்ட என்மகன் வேங்கையாம்.

நானறியேன் அவன்சேதி
கடதாசி வந்தது காவியமாம்; என்று

நடுத்தவள், அடுத்தவன் எல்லாரும் அதே வழிபோக

தனியானேன் நானே பாவியானேன்.

சங்கப்போரில் மார்பறுத்தெறியத் துணிந்த 

மங்கை வழி  நல்லாள் முகம் காண எனக்கு ஏக்கம்.
மங்கையர் திலகமென வாழ்த்தியோர் இங்கில்லை.
வானம் பொந்துவிழும்
மண்வீடும் நானுமானேன்.
கொஞ்சிக்குலாவிய குடும்பபந்தம் இடிந்தது. ஐயோ
கஞ்சிக்கும் வழியின்றி பரதேசியானேன்.

கொள்ளிகுடமுடைக்கப்பிள்ளையில்லை என்னை

ஓடிவந்து கூப்பிட உதவியில்லை.
வேங்கைகளைப் பெத்த வயிறு வேகுதையோ
வேதனைதணிய கானகப் பருந்தவந்து என் உயிர்காவுமெப்போ.

காதல் பரிசு

காதல் பரிசு

அவளதுகனவோடையில்

நீந்திநீளத்துயின்றஅந்நாளில்

எனக்கோர் ஆசையிருந்தது.




மீசைஅரும்பத்துடிக்கும்

இளவேனில் பருவத்தில்

எல்லோருக்கும் அதுதான் வரும்.

பூசைநேரமணியோசையிலோ

கோபுரதரிசனத்திலோகடவுள் நினைவுக்குவருவதுபோல

அவள்நினைவைநான் தின்னவில்லை.


எல்லாம் அவளாகிய“ஏகம் சத்”

தத்துவந்தான் அன்று

எனக்குள் ஒலித்தகீதை.


எனக்குள் அன்றுஅவள் உறைந்திருந்ததுபோல்

அவளுக்குள் நானிருந்தேனென்பது

அவள் என்னை இறுகப்பிடித்துப் பருக்கியமுத்தம்

இன்றும் சத்தியம் செய்கிறது.


நீரோடைபோல் அவள் முழுவதும்

சலசலத்தஎன்னைஅவளேசுருக்கிச் சுருக்கி

சுருக்கிட்டுகொலைசெய்ததை

அவளுக்குள் நான் செத்துநாறியபோதுஅறிந்தேன்.


இப்போதுஎனக்குள் இருந்த ஆசை

பாட்டனைப் பயமுறுத்தியபேய் பிடித்தகிழட்டுஆலமரத்தின் கீழ்

பைத்தியம் பிடித்துகுந்தியிருப்பதுஅவளுக்குத் தெரியாது.




மேரா