Friday, November 25, 2011

மக்கள் இலக்கியத்தில் நையாண்டிப்பாடல்களின் வெளிப்பாடுகள் -த.மேகராசா-

பரம்பரை பரம்பரையாக வாய்மொழிப்பாங்கில் மக்களால் பேணப்பட்டுவரும் இலக்கியங்களே மக்கள் இலக்கியங்கள்( வாய்மொழி இலக்கியங்கள்). மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் என்பவற்றின் வெளிப்பாடாக இவை அமைந்திருக்கும். மக்கள் இலக்கியத்தில் மக்கள் பாடல்கள்(வாய்மொழிப்பாடல்கள்) சிறப்புமிக்கவையாகும். மண்ணின் மைந்தர் தம் மனக்கருவரையில் கருக்கொண்டு உருப்பெற்று உயிர்பெற்று உலாவரும் உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடுகளே மக்கள்பாடல்களாகும். இவை மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையான நிகழ்வுகளை யதார்த்த பூர்வமாக வெளிப்படுத்தி நிற்கின்றன. ஏட்டுக்கல்வி பயிலாத இயல்பான புலமையும் இலக்கிய இரசனையும் உள்ள மக்களே இத்தகைய பாடல்களைப் பாடியுள்ளனர். இவை ஏட்டில் எழுதாக் கவி, மலையருவி, காற்றிலே மிதந்த கவிதை என்று பலவாறு அழைக்கப்படுகின்றன. குழந்தை அழும்போது அதனைத்தூங்க வைக்கும்போது, விளையாடும்போது, காதல் வெளிப்பாட்டின்போது, தொழில் நடவடிக்கைகளின் போது, சமய செயற்பாட்டின்போது, ஒருவரது இறப்பின்போது என்று பலவேறு சந்தர்ப்பங்களில் மக்கள், பாடல்களைப் பாடியுள்ளனர். இத்தகைய பெரும்பாலான பாடல்களில் நையாண்டித்தன்மையும் மேலோங்கி நிற்கின்றது. மக்கள் பாடல்களில் நையாண்டிப்பாடல்கள் விசேட கவனிப்புக்குரியவையாகும்.
வேவ்வேறு பட்ட சந்தர்ப்பங்களில் ஒருவரது அல்லது ஒரு குழுவினரது குணாதிசயங்களை நையாண்டிசெய்து பாடப்படுவனவாக அமைந்த பாடல்களே நையாண்டிப்பாடல்களாகும். இவை கேலிப்பாடல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. முற்காலத்தில் சான்றோர் இத்தகைய பாடல்களை அங்கதப்பாடல்கள் என்று அழைத்தனர். புகழ்வது போன்று பழித்தும் பழிப்பது போன்று புகழ்ந்தும் பாடப்பட்ட பாடல்களைத் தமிழ் இலக்கியத்தில் பரவலாகக் காணலாம். நையாண்டி செய்யும் பழக்கம் மனித சமுதாயம் தோன்றியதிலிருந்து இன்றுவரை மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது. நையாண்டிப்பாடல்களில் நகைச்சுவை உணர்வு வெளிப்பட்டாலும் இவை நகைச்சுவைப்பாடல்களிலிருந்து வேறுபட்டவை. நகைச்சுவை மனிதனைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
“ஓட்டப்பானைக்க ஓணான் பூந்தது சங்கு மாமா
அடிக்கப்போனேன் கடிக்க வந்தது தோழமாமா”
என்னும் பாடல் ஒருவரை நையாண்டி செய்யாது நகைச்சுவை உணர்வைத் தருவதாக உள்ளது. ஆனால் நையாண்டி மனிதனை அழவைத்து அவனது ஆளுமையை அவமானப்படுத்தி போபம் கொள்ளச் செய்வதாக அமைந்திருக்கும். அத்துடன் மனிதனைச் சிறுமைப்படுத்தி தலைகுனிய வைத்து வேடிக்கை பார்க்கின்றன. இத்தகைய பாடல்களை ஆண்களும் பெண்களும் பாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சில வகையான நையாண்டிப்பாடல்கள் சமூக சீர்திருத்தத்தை வேண்டிநிற்பனவாக உள்ளன. பண்டைய சமூகத்தில் பொருந்தாத்திருமணம் செய்வது அதிகமாகக் காணப்பட்டது. வயது கூடிய ஆண் வயது குறைந்த பெண்னைத் திருமணம் செய்ய விரும்பும்போது பெண்கள் குறிப்பிட்ட ஆணைக் கேலி செய்துள்ளனர். எடுத்துக்காட்டு,
கச்சான் காற்றடித்து
காட்டில் மரம் நின்றது போல்
உச்சியிலே நாலு மயிர்
ஓரமெல்லாம் வழுக்கை.
ஷஷமுப்பத்திரண்டு பல்லில்
மூணு பல்லுதான் மீதி
காகக் கறுப்பு நிறம் ஒரு
காலுமல்லோ முடமவர்க்குஷஷ
கூன முதுகழகா
குழிவிழுந்த நெஞ்சுக்காரா
ஓலைப் பெட்டி வாயோட
உனக்கெதுக்கு இந்த ஆசை
இப்பாடல்களில் பொருந்தாக் காதலுக்கு எதிரான பெண்களின் எதிர்ப்புக்குரல் நையாண்டியாக வெளிப்பட்டு நிற்கின்றது.
சமூகத்தில் அதிகாரமும் வசதியும் கொண்ட வயது கூடிய ஆண்கள் அழகான இளம்பெண்களை திருமணம் செய்வதற்கு முனைகின்றமையினை
தங்கத்தால் சங்கிலியும்
தகதகத்த பட்டாடை
பட்டனத்துச் செருப்பு
பகல் முழுதும் சுற்றி வாரார்
என்னும் பாடல் மூலம் கேலி செய்கின்றனர். வயது கூடிய ஆணை குடும்ப வறுமை காரணமாக திருமணம் செய்துகொண்ட பெண்ணொருத்தி
வாண்டதெல்லாம் இந்த
வயிற்றுக் கொடுமையினால்
இருமல் தலையிடியாம் கிழவனுக்கு
என்ன சுகம் எந்தனுக்கு
என்று வேதனைப்படுகின்றாள். பெண்ணின் அடிமனதில் தோன்றும் ஆற்றாமையும் வேதனையும் நையாண்டியாகவே வெளிப்படுகின்றது.
ஒருவருடைய உடல்தோற்றத்தின் பலவீனத்தை நையாண்டி செய்யும் பாடல்கள் கேலியின் உச்சத்தை தொட்டு நிற்கின்றன. உடல் உறுப்புக்களின் குறைபாட்டினை மிக மோசமாகக் கூறி நையாண்டி செய்யும்பாடல்கள் வசை பாடலாகவே உள்ளது.
கண்ணும் ஒரு பொட்டை
காதும் செவிடாம்
குருத்தெடுத்த வாழைபோல இவர்
கூனி வளைந்திருப்பார்.
சுட்ட கட்டை போல
சுடுகாட்டுப் பேய்போல
அட்ட முகறா நீ
அடுப்படிக்கும் ஆகுமாடா
வெள்ளை வெள்ளை என்று
வீறாப்புக் கொள்ளாதே
பாலேறிச் செத்த
பதக் கடை என்றறியாய் என்னும் பாடல்களின் மூலம் முற்கூறிய கருத்து நன்கு புலனாகின்றது.
ஆழ்ந்து நோக்கும்போது பல கேலிப்பாடல்களில் காழ்ப்புணர்ச்சி தொனிக்கின்றது. ஒருவரது குலத்தையும் கோத்திரத்தையும் அவமானப்படுத்தி கோபம் கொள்ளச் செய்யும் தன்மை இத்தகைய பாடல்களில் உண்டு. தமிழர்களின் பண்டைய விளையாட்டுக்களில் “கொம்பு முறி” முக்கியமானதாகும். வடசேரி – தென்சேரி என இரு சேரிகளாக வகுக்கப்பட்ட பழைய முறைப்படி இது நடைபெறும். ஒரு குடும்பத்திலேயே கணவன் ஒரு சேரியாகவும் மனைவி ஒரு சேரியாகவும் இருப்பர். இது உணர்வைத்தூண்டி ஆபத்தையும் ஏற்படுத்துவதாகும்.
வடசேரியான் கொம்பு எங்கே எங்கே
வண்ணாண்ட சாடிக்கு உள்ளே உள்ளே
தென்சேரியான் கொம்பு எங்கே எங்கே
செம்பகத்தாளுக்கு உள்ளே உள்ளே
என்று அமையும் பாடல் சேரியினை கேலி செய்கின்றது. இத்தகைய பாடல்களை மட்டக்களப்பின் சில பகுதிகளில் காணலாம்.
“வறுத்த கடலை தின்னி
வகை வகையாத் தவிடு தின்னி
சொறியாந் தவளை தின்னி
சொல்லி வாடா தெம்மாங்கை”
என்னும் பாடல் இந்தியாவில் வழக்கில் உள்ளது. கிராமங்களில் மாடுமேய்க்கும் சிறுவர்கள் நேரத்தைப் போக்க ஒருவருக் கொருவர் போட்டிபோட்டு இத்தகைய பாடல்களைப் பாடுவதாக அறிய முடிகின்றது.
நையாண்டிப்பாடல்கள் வெளிப்படையாகக் கருத்துக்களைப்புலப்படுத்தி நிற்கும் அதே வேளை மறைமுகமாகவும் குறியீட்டுமொழியிலும் கருத்துக்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. மக்கள் கவிஞர்களின் புலமையாற்றலை இத்தகைய பாடல்களினூடாக மிகத்துல்லியமாக அறியமுடிகின்றது.
“என்ன பிடிக்கிறாய் அந்தோனி
எலிப்பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
பொத்திப் பொத்திப்புடி அந்தோனி
பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரேஷஷ
“ கோண கோண மலையேறி
கோப்பிப் பழம் பறிக்கையிலே
ஒரு பழம் குறைஞ்சதெண்டு
ஓலம் வைச்சான் வெள்ளத்துரை”
என்னும் பாடல்கள் அந்நியர் ஆட்சி இடம்பெற்றபோது தமது எதிர்ப்பைக் குறியீட்டு மொழியில் அங்கதமாக வெளிப்படுத்திப் பாடப்பட்டள்ளது. வாய்மொழி இலக்கியங்கள் வரலாற்று மூலங்களாகும் என்பதற்கு இந்தப் பாடலும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
உறவு முறைகளை வைத்துக்கொண்டும் கேலி செய்யும் மரபு நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இத்தகைய பாடல்கள் ஒருவருக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தவனவாக அமைந்துள்ளன. மாப்பிள்ளையை மாப்பிள்ளையின் மனைவியின் தங்கை(கொழுத்தியாள்) கேலி செய்வது வழக்கமான மரபு. மாப்பிள்ளை மாமனார் வீட்டுக்கு வந்திருக்கின்றான். அப்போது கொழுத்தியாள் சந்தனத்தை தனது மச்சானின் மேல் கொட்டி கேலி செய்கின்றாள்.
ஒரு கிண்ணிச் சந்தனம்
ஒரு கிண்ணிக் குங்குமம்
அள்ளி அள்ளிப் பூசுங்கோ
அருணப்பந்தல் ஏறுங்க
ராசாக் கணக்கில்
ராசமக்க தோளிலே
பொறிச்ச பூவும் பொட்டியிலே
தொடுத்த பூவும் தோளிலே…”
மேற்கூறிய கருத்தினை இப்பாடலின் மூலம் தெரிந்துகொள்ளமுடியும்.
திருமணத்தின்போது சீதனம் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. திருமணப்பேச்சின்போதே சீதனம் தீர்மானிக்கப்பட்டுவிடும். மக்கள் பாடல்களிலும் இதன் தாக்கம் உண்டு. சீதனம் கேட்கும் ஆணிடம் பெண்ணைப் பெற்ற தாய்
“பத்தேக்கர் காணியும்
பால் மாடும் வேணுமெங்காய்
இத்தனையும் தாறதிற்கு
ஒங்கிட உத்தியோகம் என்ன கிளி”
என்று நையாண்டி செய்கிறாள். காதல் பாடல்களிலும் நையாண்டி மேலோங்கிக் காணப்படுனிறது. காதலுணர்ச்சி மிக்க ஆண்,
“கண்ணாடி வளையல்போட்டு
களையெடுக்க வந்த புள்ளே
கண்ணாடி மின்னலிலே
களையெடுப்பு பிந்துதடி.”
என்று கேலி செய்ய
“வாய்க்கால் வரம்புச் சாமி
வயல்காட்டுப் பொன்னுச் சாமி
களையெடுக்கும் பெண்களுக்கு
காவலுக்கு வந்த சாமி”
பதிலுக்கு அந்தப் பெண்ணும் கேலி பேசுகின்றாள்.
நாட்டார் பாடல்கள் பொதுவாக கவி நயம் மிக்கவை. எளிமையும் அழகும் ஆழமான கருத்தும் கொண்டவை. ஏட்டு இலக்கியத்தினை விடவும் யதார்த்தத்திலும் கற்பனையிலும் மிஞ்சி நிற்பவை. நையாண்டிப்பாடல்களும் இதற்கு விதிவிக்கல்ல. இப்பாடல்களில் எதுகை மோனை நிறைந்திருப்பதோடு உவமை உருவக அணிகளும் கையாளப்பட்டிருப்பதைக்காணமுடியும்.
“மாடுமோ செத்தல் மாடு
மணலுமோ கும்பி மணல்
மாடிழுக்க மாட்டாமல்
தானிழுத்து மாய்கிராண்டி”
என்று அமைந்த பாடலில் மனிதன் மாடாக உருவகிக்கப்பட்டுக் கேலி செய்யப்படுகின்றான்.
ஷஷநாணற் பூப்போல
நரைத்த கிழவனுக்கு
குங்குமப் பூப்போல இந்த
குமர்தானோ வாழுறது”.
நாணற்பூ நரைத்த கிழவனுக்கும் குங்குமப் பூ குமரிப்பெண்ணுக்கும் அழகிய உவமைகளாக கையாளப்பட்டுள்ளன. ஓசை நயம் பொருந்திய பாடல்களாகவும் இப்பாடல்கள் அமைந்திருக்கும்.
இலக்கிய மொழி என்பது இலக்கியங்களின் தன்மைக்கேற்பவும் கையாள்பவர்களின் வெளிப்பாட்டு ஆற்றலுக்கு ஏற்பவும் பேசப்படுகின்ற பொருளுக்கேற்பவும் வேறுபட்டதாக அமையும்.ஏட்டு இலக்கியப்பாடல்களிலிருந்து மக்கள் இலக்கியப் பாடல்கள் வேறுபட்டவை. மக்கள் இலக்கியப்பாடல்களில் பேச்சுமொழி கூடுதலாகக் கையாளப்பட்டிப்பதனை அவதானிக்கலாம். நையாண்டிப்பாடல்களின் மொழிநடை வேறுபட்டது. குறிப்பாக அவை பரிவோடு தாலாட்டும் தாயின் தாலாட்டுப்பாடல்களிலிருந்தும் அன்பால் இணைந்த காதலர்களின்; காதல் பாடல்களிலிருந்தும் வேறுபட்டவை.
அன்ன நடையழகி
அலங்கார உடையழகி
பின்னல் நடையழகி - செல்லம்மா
புறப்படம்மா தேருபார்க்க
மதன வடிவழகா
மாமோகச் சொல்லழகா
வண்ண உருவழகா - என் ஆசை மச்சானே
வரமாட்டேன் தேரு பார்க்க
என்னும் காதற் பாடலில் சொற்கள் ஒவ்வொன்றும் இனிமையும் மனதில் அன்பையும் தூண்டுவதாக அமைந்துள்ளன.
“பண்டி, குரங்கு தின்னி
பச்ச உடும்பு தின்னி
எலியாக்கித் தின்னி – எனக்கு
என்ன கத சென்னாயடா”
என்னும் கேலிப்பாடல் ஒருவரது மனதை வெகுவாகப் பாதிக்கும் தன்மையில் அமைந்துள்ளது.இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லும் கோபத்தை ஏற்படுத்தி வேதனைப்படுத்தத் தக்கதாக உள்ளது. ‘கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்’ என்னும் நூலில் எஸ்.முத்துமீரான் இப்பாடலினையும் தொகுத்துள்ளார். கூனல் முதுகு, சுட்ட கட்டை, குழிவிழுந்த நெஞ்சு,காகக் கறுப்பு,சுடுகாட்டுப்பேய், அட்ட முகறா,இஞ்சி தின்ற குரங்கு போன்ற பல சொற்றொடர்கள் நையாண்டிப்பாடல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை மக்கள் இலக்கியப்பாடல்களின் யதார்த்தப்பாங்கினைத் தெளிவாக அடையாளப்படுத்தி நிற்கின்றன.
ஆக, வாய்மொழிப்பாடல்களில் நையாண்டிப்பாடல்கள் மனிதர்களின் வித்தியாசமான உணர்வு நிலையை பிரதிபலிப்பவையாகவும் மனிதனின் குணாம்சங்களை வாழ்வியல் அம்சங்களோடு தொடர்புபடுத்தி யதார்த்த பூர்வமாக எடுத்துக் கூறுபவையாகவும் உள்ளன. நையாண்டியினூடாக எதிர்ப்புணர்வு வெளிப்படுவதோடு சமூக மாற்றத்திற்கான முனைப்பும் புலப்படுகின்றது. சில வகையான பாடல்கள் காழ்ப்புணர்ச்சியோ, பழிவாங்கலோ, அவமானப்படுத்தலோ அற்றனவாக அமைய சில வகையானவை மிகமோசமான வசைபாடலாகவும் பழிவாங்கலாகவும் அவமானப்படுத்தலாகவும் மனிதனைச் சிறுமைப்படுத்தி ஏளனம் செய்வனவாகவும் உள்ளன. எது எப்படியாயினும் நையாண்டிப்பாடல்கள் மனித உணர்வின் ஊற்றுக்களாகவும். மக்கள் இலக்கியப்பாடல்களில் முக்கிய வெளிப்பாடுகளாகவும் உள்ளமை புலனாகின்றது.

மட்டக்களப்பு தமிழியலாய்வு வளர்ச்சியும் மகேஸ்வரலிங்கமும் - பேராசிரியர் செ.யோகராசா



ஆய்வு அல்லது ஆராய்ச்சி என்பதும் தமிழிற்குப் புதியதொரு முயற்சியாகவே கருதப்படுகின்றது. இவ்விதத்தில் தமிழின் முதல் ஆய்வாளராக கோல்ட்வெல் ஐயர் (1856) கருதப்படுகின்றார். ஆரம்பத்தில் தமிழ் இலக்கியம், இலக்கணம் என்பன சார்ந்திருந்த தமிழ் ஆய்வு காலப்போக்கில் மானிடவியல், வரலாறு சமூகவியல் முதலியனவற்றுடன் தொடர்புபட்டு தமிழியலாய்வு ஆகப் பரிணமித்தது. தமிழியலாய்வாளர் என்ற விதத்தில் ஈழத்தவரான மல்லாகம் வி.கனகசபைப்பிள்ளை முன்னோடி என்று கூறத்தக்கவர். “1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்” என்பது அவரது ஆய்வு நூலாகும். இத்தகைய சூழலில் ஈழத்தில் மட்டக்களப்பு பிரதேச தமிழ்ஃதமிழியலாய்வின் வளர்ச்சி பற்றியும் அவ்வழி மகேஸ்வரலிங்கம் என்பாரது தமிழியலாய்வுப் பங்களிப்பு பற்றியும் கவனிப்பது பயனுடையது.
இவ்விடத்தில் இன்னொரு முக்கிய விடயத்தையும் நினைவு கூர்வதவசியம். ஆய்வு வளர்ச்சிக்கும் நவீன கல்வி முறையின் தோற்றத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து நவீன கல்வி இரு விதங்களில் காலூன்றியது. மரபு வழி சார்ந்த தமிழ்க்கல்வி நவீன கல்வி முறைமைக்குட்பட்டது மட்டுமன்றி ஆங்கிலம், விஞ்ஞானம் முதலிய புதிய கற்கை நெறிகள் சார்ந்த நவீன கல்வியும் ஆக அது இருகிளைப்பட்டு வளரத் தொடங்கியது. இத்தகைய ஆய்வுச் சூழல் மட்டக்களப்பிலே இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே முகிழ்ப்புற்றது எனலாம்.
மேற்கூறிய பின்புலத்தில் மட்டக்களப்பின் நவீன தமிழியலாய்வு முன்னோடியாக சுவாமி விபுலானந்தர் அமைகின்றார் விஞ்ஞானப் பட்டதாரியும் தமிழ்ப் பண்டிதருமான விபுலானந்தர் அவ்வாறு வெளிப்பட்டமை வியற்பிற்குரியதன்று. ஆயினும் தமிழ், இலக்கியம், மொழியியல், சமயம், தத்துவம், கலை, நாட்டாரியல், வரலாறு முதலான பல துறைகளிலும் ஈடுபட்டு அவர் தமது ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு முன்னரே வித்துவான் பூபாலப்பிள்ளை எழுதி ‘தமிழ் வரலாறு’ (1920) என்றொரு ஆய்வு நூலை வெளியிட்டிருப்பது குறிப்பிடற்பாலது.
அதுமட்டுமன்றி, மட்டக்களப்பில்,தமிழ் ஆய்வு தமிழியலாய்வாக பரிணமிப்பதற்கு அடித்தளமான முன்னோடி முயற்சி என்ற விதத்திலே எஸ்.ஓ. கனகரத்தினம் என்பவர் வெளியிட்ட Monograph of Batticaloa District of the Eastern Province of Ceylon (1921)என்ற நூலின் முக்கியத்துவம் பற்றியும் மறப்பதற்கில்லை.

ஆயினும், சுவாமி விபுலானந்தரை தொடர்ந்து அவ்வப்போது பண்டிதர் பூபாலப்பிள்ளை, புலவர் மணி பெரிய தம்பிப்பிள்ளை முதலானோர் தமிழ் ஆய்வு முயற்சிகளில் அவ்வப்போது ஈடுபட்டு வந்திருப்பினும் ஐம்பதுகளின் பின்னரே அது உத்வேகம் பெறத் தொடங்கியது. ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் செயற்பாடுகளோடு அவற்றைவிட முக்கியமாக பல்கலைக்கழகக் கல்வி அறுபதுகளளவில் தாய்மொழிக் கல்வியூடாக பயில்கின்ற வாய்ப்புக் கிடைத்தமையே அதற்கான முக்கிய காரணமாகிறது. இவ்விதத்தில் பல்கலைக்கழகக் கல்வி முறைமையுடன் தொடர்புபடாத வித்துவான் F.X.C நடராசாவின் முயற்சிகளும் பண்டிதர் வீ.சி. கந்தையாவின் முயற்சிகளும் முக்கியமானவை. F.X.C நடராசாவின் சுயமான கட்டுரைகள் மட்டுமன்றி அவர் தொகுத்த மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும் (1960) என்பதும் முக்கியமானதொரு நூலாகின்றது. மட்டக்களப்பு தமிழியலாய்வு என்ற விதத்தில் அது கவனத்திற்குரிய முன்னோடி முயற்சியாகின்றது. வீ.சி.கந்தையாவின் ‘மட்டக்களப்பு தமிழகம் (1964) அவ்விதத்தில் மற்றொரு மைல்கல்லாகின்றது’.
பல்கலைக்கழக கல்வி முறைமையுடன் நேரடியாகத் தொடர்புபட்டவர்களென்ற விதத்தில் (தொழில் ரீதியிலே) பல்கலைக்கழகம் சார்ந்த சி.மௌனகுரு, இ.பாலசுந்தரம், சித்திரலேகா (உதயதேவி), நுஃமான் எனப் பலரும் இத்துறையில் பிரவேசித்து தமிழாய்வுத் துறையை அகலப்படுத்தியும் ஆழப்படுத்தியும் வந்த சூழலிலேயே (தொழில் ரீதியில் பல்கலைக்கழகம் சாராத) டி.சிவராம், வ.சிவசுப்பிரமணியம், வித்துவான் கமலநாதன், மகேஸ்வரலிங்கம் ஆகியோர் தமிழாய்விற்குள் பிரவேசிக்கின்றனர்.
-2-
மகேஸ்வரலிங்கம் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளுள் கணிசமானவை இரு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றுளொன்று. ‘மட்டக்களப்பு சிறு தெய்வ வழிபாடு - ஓர் அறிமுகம்’ (1996). மற்றொன்று அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகிய ‘மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும்| (2008).
இவ்விரு நூல்களும் மட்டக்களப்பு தமிழியலாய்வு வளர்ச்சியில் பெறுகின்ற முக்கியத்துவம் எத்தகையது என்பதே இ;வ்வேளை எமக்குள் எழுகின்ற வினாவாகின்றது.
மகேஸ்வரலிங்கத்தின் ஆய்வு முயற்சிகளுள் |மட்டக்களப்பு சிறு தெய்வ வழிபாடு ஓர் அறிமுகம் என்ற நூல்| ஓர் அறிமுகம் என்ற நூல் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றென்பதனை வலியுறுத்த வேண்டியது அவசியமன்று. ஏனெனில் இதற்கு முன்னர் மட்டக்களப்பு பிரதேச சிறு தெய்வ வழிபாடு பற்றி உதிரியான கட்டுரைகள் தவிர ஆழமான ஆய்வுகளெதுவும் நடைபெற்றிருக்கவில்லை. இவ்விதத்தில் இதுவே முதல் முயற்சியாகின்றது எனலாம். அது மட்டுமன்றி (1) தெய்வ பாகுபாடும் சிறு தெய்வ வழிபாடும் (2) மட்டக்களப்பும் சிறு தெய்வ வழிபாடும் (3) பெண் தெய்வங்கள் (4) ஆண் தெய்வங்கள் (5) சிறு தெய்வங்களுள் சிறு தெய்வங்கள் (6) பிதிர் வழிபாடு (7) பிற சமயத்தவரும் சிறு தெய்வ வழிபாடும் (8) வழிபாட்டு முறைகள் என்ற விதங்களி;ல் பரந்த அடிப்படையிலும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் மட்டக்களப்பு பிரதேச வழிபாடு பற்றி அணுக முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு பிரதேசத்தில் இத்தகைய கோயில்கள் அமைந்துள்ள ஊர்கள் பற்றிய அட்டவணையும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட ஆய்வு நூல் தொடர்பாக, ஆய்வாளரொருவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது.
மட்டக்களப்பின் வரலாறு இன்னும் சரியானபடி இனங்காணப்படவில்லை. மட்டக்ளப்பின் வரலாற்றை உருவாக்க வாய்மொழி, கலை இலக்கியப் பாரம்பரியமும் இன்று நின்று நிலவும் மத நடைமுறைகள், கரணங்கள் என்பனவும் கர்ண பரம்பரைக் கதைகளும் மிகுந்த உதவி புரியக் கூடும். இந்த வகையில் திரு. மகேஸ்வரலிங்கம் இந்நூலிற் தரும் தகவல்கள் மிகுந்த பயனுடையவை|
மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும்| நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பலவும் மட்டக்களப்பு பண்பாடு, சமயம், கலைகள் சடங்குகள், பிரதேச வரலாறுகள், ஆளுமைகள் முதலான பல்துறைகளும் சார்ந்தவை.
மேற்கூறியவற்றுள் சில, முதன் முயற்சிகளாம். மட்டக்களப்பு பண்பாட்டில் வீடும் வாழ்வும் என்பது இவற்றுள் முதன்மையானது. தலைப்பிற்கேற்ப ஊரும் வளவும், வீடு அமைப்பு, வீட்டமைப்பில் முக்கிய நிகழ்வுகள், குடும்பத் தலைமை, (வீட்டில்) சமய ஆசாரங்களைப் பேணல், (வீட்டில் நிகழ்கின்ற) சடங்குகள், (உ-ம் : திருமணம், மரணச் சடங்குகள்) என அகலமும் ஆழமும் பெற்று இக்கட்டுiரை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (இவ்வாறெல்லாம் நோக்கும் போது இக்கட்டுரையில் வீடு என்பது மட்டக்களப்புச் சமூக நிலையை வெளிப்படுத்தும் குறியீடு ஆகியிருப்பது கண்கூடு).
தவிர மட்டக்களப்பு பிரதேசச் சமயமும் சமயத்துடன் தொடர்புபட்ட வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் சார்ந்த கட்டுரைகளே இந்நூலில் அதிகளவு இடம்பெற்றுள்ளன. இவற்றுள், மட்டக்களப்பின் பண்டைய சமயநிலை பற்றிய கட்டுரை பண்டைய கால பல்வேறு சமயங்கள் பற்றியும் சுருக்கமாக ஆராய்கின்றமை குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரையில் சுருக்கமாக இடம்பெற்றவற்றுள் ஒன்றாகிய வழிபாட்டு முறைகள், பிறிதொரு கட்டுரையில் விரிவான ஆய்விற்குட்படுகின்றது.
மேற்கூறிய வகையான கட்டுரைகளுள் மட்டக்களப்பின் வீர சைவம் பற்றிய கட்டுரையும் முக்கியமானது. மட்டக்களப்பில் இச்சமயத்தின் தோற்றம், பரம்பல் பற்றி விரிவாக ஆராய்கின்ற ஆசிரியர் இலங்கையின் வீர சமய வரலாற்றுப்பின்னணியில் அவை பற்றி விளக்கிச் செல்வது பொருத்தமானது.
பிரதேச வரலாறு சார்ந்த கட்டுரைகளாக மூன்று உள்ளன. தாந்தாமலை, மண்முனை தென்மேற்குப் பிரதேசம், அம்பிளாந்துரைப் பிரதேசம் ஆகியன இவ்விதத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பிரதேச விளையாட்டுக்கள் தொடர்பானவையாக இரு கட்டுரைகள் காணப்படுகின்றன. இவற்றுள் ஒன்றான |மட்டக்களப்பின் பாரம்பரிய விளையாட்டுக்கள்| பற்றிய கட்டுரை அப்பாரம்பரிய விளையாட்டுக்களை புதிய முறைகளில் வகைப்படுத்தி ஆராய்கின்ற புதிய முயற்சியாகின்றது. மற்றொன்றான கொம்பு விளையாட்டு, தெய்வ வழிபாட்டு என்ற விதத்தில் அணுகப்படுகின்றது. இதுபற்றி ஏலவே எழுதப்பட்டுள்ள வி.சீ.கந்தையா முதலானோரின் கட்டுரைகளை விட, புதிய சில தகவல்களைக் கொண்டதாகவும், படங்கள் பலவற்றைக் கொண்டதாகவும் இக்கட்டுரை அமைந்திருப்பது. பாராட்டப்பட வேண்டியதொன்றாகிறது.
மட்டக்களப்பின் ஆளுமைகள் சார்ந்ததாக அமைகின்ற இரு கட்டுரைகள் கூட மட்டக்களப்பு சமயப்பெரியார்கள் பற்றியனவே. இவ்விதத்தில், அருணாசல தேசிகர், வித்துவான் சரவண முத்தன் ஆகியோர் பணிகள் மட்டக்களப்பின் சுதேச இயக்கப்பின்புலத்தில் கவனத்திற்குட்படுத்தப்படுகின்றன. இவர்களுள் ஒருவரான அருணாசல தேசிகர் பற்றிய கட்டுரை விரிவான முதன் முயற்சி என்பதில் தவறில்லை.
தவிர, இந் நூலில் இடம்பெற்றுள் இரு கட்டுரைகள் - நுண்கலைகள், நாட்டுக் கூத்துக்கள் தொடர்பானவை - அறிமுக நிலைப்பட்டன. ஆயினும், நூலிற்கு முழுமை சேர்ப்பன என்ற விதத்தில் முக்கியமானவையே.
சுருங்கக் கூறின், மட்டக்களப்பு பிரதேச பண்பாடு, சமயம், வரலாறு, சமூகம், மானிடவியல் முதலான சார்ந்த முக்கிய கூறுகள் சிலவற்றை தமிழில் முதன் முதலாக ஆய்வுக்குட்படுத்தியவனவாகவும் சிலவற்றை முதன் முதலாக விரிவாக நோக்குவனவாகவும் மகேஸ்வரலிங்கத்தின் ஆய்வு முயற்சிகளுள்ளமை விதந்துரைக்கப்பட வேண்டியதொன்றென்பதில் ஐயமில்லை.
இந்நூற் தொகுப்பில் இடம்பெறத் தவறிய வேறு சில கட்டுரைகளோடு மட்டக்களப்பு வீர சைவம் பற்றிய விரிவான ஆய்வொன்றிற்கான முயற்சிகளிலும் மகேஸ்வர லிங்கம் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளார். அவையாவும் நூலுருப் பெறுகின்ற போதுதான் அன்னாரின் ஆய்வு சார் ஆளுமை மென்மேலும் துலக்கமுறும் என்பதையும் இவ்வேளை வற்புறுத்துவது அவசியமாகிறது.
இறுதியாக, பொருத்தம் கருதி மகேஸ்வர லிங்கம் பற்றிய பிறிதொரு ஆய்வாளரின் குறிப்புடன் இவ்வறிமுகக ;கட்டுரையை முழுமை செய்வது பொருத்தமென்று கருதுகின்றேன். அது பின்வருமாறு:
“ மகேஸ்வரலிங்கம் அவர்கள் தொழில் முறை ஆய்வாளர் அல்ல. ஆயினும், அவரது ஆய்வுகள் பெரும்பாலும் ஆய்வு நெறிமுறைகளுக்கு அப்பால் விலகிச் செல்லவில்லை. நெறிமுறை சார்ந்த மானிடவியல் ஆய்வாளராகவே அவரைத் துக்கம் செய்கின்றன. தற்போது கொலறாடோ பல்கலைக்கழகத்தின் (University of Colorado at Boulder)) மானிடவியல் துறையின் தலைவராக விளங்கும் பேராசிரியர் டெனிஸ் அவர்கள் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக விளங்கிய காலத்தில் (1970 களில்) மட்டக்களப்பைக் களமாகக் கொண்டு ஆய்வு மேற்கொண்ட வேளை அவருக்கு ஆய்வுத் துணைவராக விளங்கிய அமரர் மகேஸ்வரலிங்கம் அவர்கள் தொடர்ந்தும் அவரோடு புலமைத் தொடர்புகள் வைத்துக் கொண்டவர். அத்தொடர்பும் மகேஸ்வரலிங்கத்துக்கே இயல்பான ஆற்றலும் அவரை ஒரு சிறந்த மானிடவியலாய்வாளராகத் துலங்கச் செய்தன எனலாம்.”

Wednesday, November 23, 2011

கொக்கட்டிச்சோலைத் திருத்தான்தோன்றீச்சர பரிபாலன சபையின் அனுசரணையுடன் பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம்,க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்காக நடாத்தும் பரீட்சைக்கு உதவு கருத்தரங்கு – 2011

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, இரண்டு மணித்தியாலம்
தமிழ் மொழியும் இலக்கியமும்-111
முக்கியம்: அறிவுறுத்தல்களுக்கேற்ப ஐந்து வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக.
• 1.2.3.4 ஆகிய வினாக்களுக்கும் 5.6.7 ஆம் வினாக்களில் ஏதாவது ஒரு வினாவிற்கும் விடை எழுதுக.
• இவ்வினாத்தாளுக்குரிய புள்ளிகள் 80 ஆகும்.

1. சுருக்கமான விடை தருக.
(i) “சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது.”
(அ) இகல் என்பதன் கருத்து யாது?
(ஆ) இக்குறட்பாவின் கருத்தை எழுதுக.
(ii) கலம்பகம் என்பது ஒரு சிற்றிலக்கியத்தின் பெயர்.நந்திக்கலம்பகம் எனப்பெயர் வரக் காரணம் யாது?
(iii) “என்மேல் குற்றம் குறை இருந்தால் அதனை விசாரிக்கவும் என்னைத் தண்டிக்கவும் விதிமுறைகள் உண்டு” - இக்கூற்று யாரால் கூறப்பட்டது?
(iv) “நல்லமரமும் நச்சுமரமும்” என்னும் கட்டுரையின் ஆசிரியர் யார்? இக் கட்டுரை எந்நூலில் உள்ளது?
(v) “செங்கண் மாக்கோதை சினவெங்களியானை”- இதில் குறிப்பிடப்படும் மன்னன் யார்?
(vi) “நண்பகலின் வெய்யில் அஞ்சி மரத்தடியில் ஒதுங்கும் பெரு நிழல்” - இதில் இடம்பெறும் அணியினை விளக்குக.
(vii) “சென்றொழிந்த காலம் திரும்பி வரமாட்டாது குன்றிற் பொழிந்த மழையின் பெருவெள்ளம் ஓடைகளாய் மாறி…….”
(அ) இக் கவிதையின் தலைப்பு யாது?
(ஆ) இக் கவிதை எத் தொகுப்பு நூலில் அமைந்துள்ளது?
(viii) “பாதகா என் சிங்கத்தை மறைந்து வந்து கொன்றுவிட்டாயே, என்னை மணக்கலாம் என்றல்லவோ இருந்தாய்!”
(அ) இக்கூற்று யாருக்குக் கூறப்பட்டது?
(ஆ) சிங்கம் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
(ix) “மங்கயர்க்கரசியின் காதல்” என்னும் சிறுகதைக்கு சூசிகை எழுதப்பட்டதன் நோக்கம் யாது?
(x) பின்வரும் குறளைச் சந்தி பிரித்து எழுதுக.
“நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கட் பட்ட திரு”
2. பின்வரும் செய்யுட் பகுதிகள், உரைப்பகுதிகள் ஒவ்வொன்றினதும் கருத்தை உமது மொழிநடையில் எழுதுக. அவை ஒவ்வொன்றிலும் தடித்த எழுத்துக்களில் உள்ள தொடர்களின் சிறப்புக்களை விளக்கி எழுதுக.
(அ) “மண்ணெல்லாம் உய்ய மழைபோல் வழங்குகரத்
தண்ணுலா மாலைத் தமிழ்நந்தி நல்நாட்டில்
பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்
வெண்ணிலா வேயிந்த வேகமுனக் காகாதே”.
(ஆ) மஞ்சுமஞ் சுங்கைப் பரராஜ சேகர மன்னன் வெற்பில்
பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள் பகழி
அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்
நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுனது நயனங்களே.
(இ) அப்பொய்கையில் இலங்கிய அழகிய மலர்கள் முகமலர்ந்து இருவரையும் இருகே அழைப்பன போல் அசைந்தன. அவ்வாவியின் தண்மையும் செம்மையும் கண்ட இருவரும் தாய் முகம் கண்ட சேய்போல மனம் களித்து அந்நன்னீரைப் பருகி மகிழ்ந்தார்கள். அருந்தாகத்தால் வருந்திய இருவருக்கும் தண்ணீரை எடுத்து வழங்கும் தன்மைபோல் அடுக்கடுக்காக அலைகள் கரையருகே வந்து சேர்ந்தன.
(ஈ) மாசியில் மறைந்த மதியின் துலக்கமும், கூடை கவிழ்ந்த விளக்கின் ஒளியும் போல் நம்மை மூடிக்கொண்டிருக்கும் அறியாமை என்னும் இருளில் அகப்பட்டவர்களாகி நம் அறிவையிழந்து அழியாச் செல்வத்தை அடைய முயலாமல், நிலையின்றி அழிந்துபோகும் பொருள்களையே நிலையாகப் பிழைபட நினைத்து அவற்றைப் பெறுவதிலும் அவற்றை நுகர்வதிலுமே நமது காலத்தைக் கழித்து வருகின்றொம்.
3. தமக்கென வாழாது பிறர்க்கென வாழும் பெரியார் பால் அமைந்த செல்வமும் பிறருக்கு எதுவுமே கொடுத்துதவாத பேதையர் பால் அமைந்த செல்வமும் நல்லமரமும் நச்சு மரமும் என்னும் கட்டுரையில் விளக்கப்பட்டிருக்கு மாற்றினை தெளிவுபடுத்துக.
அல்லது
விடியுமா சிறுகதையின் தொடக்கம்,முடிவு, கதைக்கும் தலைப்புக்கும் இடையிலான பொருத்தப்பாடு ஆகியவை குறித்து எழுதுக.
4. நளவெண்பா சுயம்வர காண்டப் பகுதியில் தமயந்தியின் அழகு, மனநிலை, விவேகம் என்பன சித்திரிக்கப்பட்டிருக்குமாற்றை விளக்குக.
அல்லது
நந்திக் கலம்பகம் என்ற இலக்கியத்தில் இடம்பெறும் (அ) மண்ணெலாம் உய்ய…..(ஆ) மங்கையர்கண் புனல்பொழிய ……எனத்தொடங்கும் பாடல்களில் தலைவனைப்பிரிந்த தலைவியின் பிரிவுத்துயரும் நந்திவர்மனின் கொடைச்சிறப்பும் வெளிப்படுத்தப்படுமாற்றை எழுதுக.

• 5,6,7 ஆம் வினாக்களுள் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்து எழுதுக.
5. மங்கையர்க்கரசியின் காதல் என்ற சிறுகதையில் மங்கையர்க்கரசி கருணாகரன் மீது கொண்ட அளவற்ற காதல் புலப்படுத்தப்பட்டிருக்கும் வகையினை மூன்று சம்பவங்களைக்குறிப்பிட்டு, விளக்குக.
6. நிழலின் நினைவு என்ற கவிதையை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
(அ) இக்கவிதையைப் பாடிய கவிஞரின் பெயர் யாது?
(ஆ) இக்கவிதையில் கவிஞர் புலப்படுத்தும் பிரதான கருத்து யாது?
(இ) இக்கவிதையில் இடம்பெறும் அணிகளை எடுத்துக் காட்டுக்களுடன் குறிப்பிடுக.
7. (அ) வாழ்த்துக்கவி, வசைக்கவி என்பவற்றை விளக்குக.
(ஆ) சடையப்பவள்ளலைக் கம்பர் ஏன், அவ்வாறு வாழ்த்திப் பாடுகின்றார்?
(இ) இடைச்சியர் கொடுத்த மோரைக் குறித்துக் காளமேகப்புலவர் ஏன், எவ்வாறு வசை பாடுகின்றார்?

கொக்கட்டிச்சோலைத் திருத்தாந்தோன்றீச்சர பரிபாலன சபையின் அனுசரணையுடன் பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம்,க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்காக நடாத்தும் பரீட்சைக்கு உதவு கருத்தரங்கு – 2011 கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, மூன்று மணித்தியாலம் தமிழ் மொழியும் இலக்கியமும்-1,11 தமிழ் மொழியும் இலக்கியமும்-1

கொக்கட்டிச்சோலைத் திருத்தாந்தோன்றீச்சர பரிபாலன சபையின் அனுசரணையுடன் பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம்,க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்காக நடாத்தும் பரீட்சைக்கு உதவு கருத்தரங்கு – 2011
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, மூன்று மணித்தியாலம்
தமிழ் மொழியும் இலக்கியமும்-1,11
தமிழ் மொழியும் இலக்கியமும்-1
(i) எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக. வினாத்தாள் 1 இற்குரிய புள்ளிகள்40 ஆகும்.
(ii) 1 தொடக்கம் 40 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றிலும் (1),(2),(3),(4) என எண்ணிடப்பட்ட விடைகளில் சரியான அல்லது மிகப்பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
(iii) உமக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் ஒவ்வொரு வினாவுக்கும் உரிய வட்டங்களில் உமது விடையின் எண்ணை ஒத்த வட்டத்தினுள்ளே புள்ளடியை(ஒ) இடுக.
(iஎ) அவ்விடைத்தாளின் பிற் பக்கத்தில் தரப்பட்டுள்ள மற்றைய அறிவுறுத்தல்களையும் கவனமாக வாசித்து அவற்றைப்பின்பற்றுக.
• பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றிலும் தடித்த எழுத்திற் காணப்படும் சொல் பற்றிய வினாவுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.

1. நச்சப்படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம் பழுத்தற்று| இச்செய்யுளில் நச்சப் படாதவன் என்பதன் கருத்து யாது?
1.விரும்பப்படாதவன் 2.ஆசை கொண்டவன் 3.பொறாமை கொள்ளாதவன் 4.கோபப்படாதவன்
2); வேழத்திற் பட்டுருவுங்கோல் பஞ்சிற் பாயாது.| - வேழம்; என்பதன் ஒத்தகருத்து யாது?
1. குதிரை 2. மலை 3. வேங்கை 4. யானை
3) ஷமருள் தீர்ந்த மாசு அறு காட்சியவர்| இங்கு மருள் என்பதன் ஒத்தகருத்துச் சொல் யாது?
1. காரிருள் 2. மயக்கம் 3. தெளிவு 4. பொருள்
4) வீட்டின் தெருவோரக் கொட்டகையில் ஓர் உருவம் குந்தியிருந்தது. குந்தியிருந்தது என்பதன் எதிர்கருத்துச் சொல்.
1. அமர்ந்திருந்தது 2.படுத்திருந்தது 3.எழுந்துநின்றது 4.உட்காந்திருந்தது
5) நடுவு நிலைமையைப் போற்றுவதே நீதிபதியின் தலைமைப்பண்பு. நடுவு நிலைமை என்பதன் எதிர்கருத்துச் சொல்
1. பாராட்டு 2.வீழ்ச்சி 3.பட்சபாதம் 4.ஒத்திப்போடுதல்

• பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க
6) பாதுகாக்குமாறு ஒருவரை மற்றொருவரிடம் சேர்த்தல்,
1. ஒப்புவித்தல் 2.ஓம்படை 3.ஒப்படைத்தல் 4.ஒப்புக்கொடுத்தல்
7) இலங்கை அரசு தனது பாதீட்டில் பெரும் நிதியை யுத்தச் செலவீனங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது..- பாதீடு என்பது
1. பதிலீடு 2.வரவு செலவுத்திட்டம் 3.முதலீடு 4.பதிவேடு
8) ஒவ்வொரு நொடிப்பொழுதும் உயிரைப் பணயம் வைத்துத்தான் நாம் வாழவேண்டியிருக்கின்றது. பணயம் என்பதன் பொருள்.
1. ஈடாக வைத்தபொருள் 2. பந்தயப் பொருள்
3. திரும்பப் பெறமுடியாத பொருள் 4. முன்வைத்திடும் பொருள்
9) கடலில் கப்பல் செலுத்துபவன்;.
1. வலவன் 2. பாகன் 3. இயக்குநன் 4. மீகாமன்
10) இளைத்த காலத்தில் உதவுவதற்காகச் சேமித்து வைக்கப்படும் சேமப்பொருள்
1. ஓய்வ+தியம் 2.சேமிப்புப்பணம் 3.ஏகபோகம் 4.எய்ப்பில் வைப்பு

11) அரசுக்கு மக்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கொடுக்கும் பொருள்
1. கட்டணம் 2.தீர்வை 3.சுங்கம் 4.அரசிறை
12) எவரும் அறியாத வகையிற் பிறநாட்டு இரகசியச் செய்திகளை அறிவோர்
1. தூதுவர் 2.ஒற்றர் 3.அமைச்சர் 4.அதிகாரிகள்
13) அநுபவத்தோடு இணையாத கல்வி அறிவு
1. பட்டறிவு 2.ஒத்திகை 3.ஏட்டுச் சுரைக்காய் 4.கண்கழுவுதல்
14) போர்க்களத்தில் படை அணிவகுப்பில் முதல் வரிசையில் நிற்பது;;;,
1. காலாட்படை 2.தேர்ப்படை 3.யானைப்படை 4.தூசிப்படை
15) வாழ்த்தினும் வையினும் அவ்வப் பயனைத் தரும் சொல்,
1. பொன்மொழி 2.வசைமொழி 3.நிறைமொழி 4.பழிமொழி
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க
16) கமலன் ஓட்டைக் கையனாய் வாழ்ந்தான். ஓட்டைக்கை என்னும் மரபுத் தொடரின் பொருள்
1. பணக்காரன் 2. உலோபி 3. கொடையாளி 4. செலவாளி
17) கண்ணன் கண்டபடி கடன் கொடுத்தமையினால் வியாபாரம் கையைக் கடித்தது .- கையைக் கடித்தல் என்னும் மரபுத் தொடரின் பொருள்.
1. கைசோர்தல் 2. பொருள் நட்டமடைதல் 2. விருத்தி பெறல் 4. கையிற் கிடைத்தல்
18) நன்மாணாக்கன் ஆசிரியர் சொல்லைத் தலைமேற் கொண்டு ஒழுகினான். தலைமேற் கொள்ளுதல் என்னும் மரபுத்தொடரின் பொருள்
1. கவனமாகக் கேட்டல் 2. பக்தி சிரத்தையோடு பின்பற்றல்
3. அறிவுரையாய் ஏற்றம் 4. மூளையிற் கொள்ளல்
19) விகடகவி பொடி வைத்துப் பேசுவதிலே சமர்ததன். இங்கு பொடி வைத்துப் பேசுதல் என்ற மரபுத் தொடா.;
1. தந்திரமாகப் பேசுதல் 2. நகைச் சுவையாகப் பேசுதல்
3. நறுக்காகப் பேசுதல் 4. சுற்றி வளைத்துப் பேசுதல்
20) நெருப்பெடுத்தல் என்னும் மரபுத்தொடரின் பொருள்
1. கருப்ப+ரச் சட்டி எடுத்தல் 2. நெருப்பு மூட்டுதல்
3. வெறுப்ப மிக உண்டாதல் 4. கடுமையாகக் கண்டித்தல்
21) வருகின்றனன் - இதில் வந்துள்ள ஆண்பால் விகுதி,
1. கின்று 2. அன் 3. வரு 4. ஆன்
22) செய்பவன், செயல், காலம் ஆகியன வெளிப்படத் தோன்றி முற்றுப்பெற்று நிற்கும் சொல்,
1. பெயரெச்சம் 2. தெரிநிலை வினைமுற்று 3. பெயர்ச்சொல் 4. குறிப்பு வினைமுற்று
23) பின்வருவனவற்றுள் காலங்காட்டும் தொழிற் பெயராகவும் தெரிநிலை வினைமுற்றாகவும் வரத்தக்கசொல்,
1. பாய்ந்தான் 2. பாய்ந்தனர் 3. பாய்ந்தன 4. பாய்ந்தது.
24) “பிச்சை புகினும் கற்கை நன்றே” இதில் உம் இடைச்சொல் தந்த பொருள்,
1. எதிர்மறை 2. முற்று 3. எச்சம் 4. எண்
25) பெயர், வினைச்சொற்களைச் சார்ந்து அவற்றின் பண்புகளை உணர்த்துவதற்கென்றே அமைந்தவை,
1. உருபுகள் 2. இடைச்சொற்கள் 3. உரிச்சொற்கள் 4. சுhரியை
26) பெண்பால் விகுதி கொண்ட சொல்
1. வந்தனர் 2. வந்தது 3. வருகிறாள் 4. வந்தார்
27) பலவின்பால் விகுதி கொண்ட சொல்
1. போயிற்று 2. நடந்தன 3. வந்தார் 4. வந்தனர்

28) சென்றேன் என்பதில் வந்துள்ள இறந்த கால இடைநிலை
1. ஏன் 2. செல் 3. ன் 4. ற்
29) நன்றி மறப்பது நன்றன்று. இதன் பயனிலை
1. நன்றி 2. நன்றன்று 3. அன்று 4.மறப்பது
30) யான் என்பது நான்காம் வேற்றுமை உருபு ஏற்றால்
1. நமக்கு 2. நானை 3. யானை 4. எனக்கு
பின்வரும் பந்திகளின் பிரதான கருத்தைத் தெரிவு செய்க
31) ஆசைப்படாதவர்கள் மனிதர்களில்லை.அதற்காக எல்லாவற்றுக்கும் ஆசைப்படவும் கூடாது. அளவு கடந்தும் ஆசை கொள்ளக் கூடாது.
1. ஆசைப்படக் கூடியவற்றில் அளவோடு ஆசை வைத்துக் கொள்ளுதல் நல்லது. 2. ஆசை மோசமானது. 3.. மனிதர்கள் ஆசைப்படக் கூடியவர்கள். 4. எல்லாவற்றிலும் ஆசை வைத்துக் கொள்ளுதல் நல்லதல்ல
32) ஒருவரோடு ஒருவர் உறவு கொள்ளுவது இயல்பானது. எதிர்பார்ப்போடு உறவு கொள்வோர் தம் எதிர்பார்ப்பு நிறைவேறாவிடில் மன உழைச்சலுடன் வெளியேறி விடுவர். அவ்வாறு அன்றி உறவு கொள்வோர் இன்பத்திலும் துன்பத்திலும் நெடுங்காலம் இணைந்திருப்பர்.
(1) இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுப்பதே நல்ல உறவு.
(2) ஒருவரோடு ஒருவர் உறவு கொள்ளுவது இயல்பானது.
(3) துன்பமும் இன்பமும் உறவுக்குத் தடையாக உள்ளது.
(4) உறவு மன உழைச்சலை ஏற்படுத்தும்.
பின்வரும் வினாக்களிலுள்ள வாக்கியத்தின் முற்பகுதிக்குப் பொருத்தமான முடிக்கும் பகுதியைத் தெரிக

33) அங்கே நிற்கும் குழந்தைகள்,
1. அவர்களுடையதல்ல. 2. அவர்களுடையவரல்லர். 3. அவர்களுடையதன்று. 4.அவர்களுடையனவல்ல.
34) நீர் கூப்பிட்டிராவிட்டால் அவர்;,
1. போய்விட்டிருந்தார். 2. போய்விட்டிருப்பார். 3. போய்க்கொண்டிருக்கிறார் 4.. போய்விட்டார்.
35) ஆயிரம் தாரகைகள் சேர்ந்தாலும்,
1. ஒரு சந்திரனுக்கு நிகராகுமா? 2. ஒரு சந்திரனை ஒப்பனவா?
3. ஒரு சந்திரனை நிகராகாது 4. ஒரு சந்திரனை ஓக்கும்
பின்வருவனவற்றுள் சரியாக எழுத்துக் கூட்டப்பட்ட சொல்வரிசையைத் தெரிவு செய்க.
36) 1.அரசியல், உலகியல், தொல்லியல், நல்லியல் 2. சந்தை, மலக்கறி, நாளங்காடி, சம்பளம்.
3. தினைக்களம், கல்விற்கந்தோர், உளவியல், மாக்சிஸம் 4 புடைவை, அகழ்வாராட்சி, பூந்த்தோப்பு
பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றிலும் புள்ளிக் கோடிட்ட இடத்தை நிரப்புவதற்கு மிகப்பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க.
37) கிளி தன்........... மாம்பழத்தைக் கோதியது.
1. அளகினால் 2.அலகினால் 3.அழகினால் 4.அலகிணால்

38) ................ கண்ணீர் விடுவது போன்று மழைத்துளி விட்டுவிட்டு விழுந்தது.
1. வாணம் 2.வாநம் 3.வானம் 4.வாநனம்
39) அளகவல்லி பிடித்துவந்த ........... பயத்தால் நடுங்கியது.
1. ஆண்மயில் 2.அளகம் 3. அளகு 4.அழகு
கீழே சில வாக்கியங்கள் ஒழுங்கின்றிக் காணப்படுகின்றன.அவ்றை ஒழுங்குபெற வைத்தால் கட்டுக்கோப்பான பந்தியொன்று அமையும். அவ்வாறு பந்தியை அமைப்பதற்கு மிகப் பொருத்தமான வைப்பு முறையைத் தெரிவு செய்க.
40) (அ) அக்குணங்களை ஆள்பவர் ஆண்மையுடையோர்.
(ஆ) சான்றாண்மை உள்ளவரே சான்றோர்.
(இ) அக்குணங்களில் எதுவும் தன்னைவிட்டுப் பிரிந்து போய்விடாமல் அடக்கி ஆண்டு வாழுபவர் சான்றாண்மை உடையோர்.
(ஈ) ஒழுக்கத்தை உயிரிலும் பெரிதாகக் கருதுவது நற்குணங்களில் ஒன்று.
(உ) நற்குணங்கள் பலவற்றைப் படைத்தோர் நல்லோர்.
1. இ,ஆ,அ,உ,ஈ 2. உ,அ,ஈ,ஆ,இ 3. இ,அ,ஈ,உ,ஆ 4. இ,உ,ஆ,ஈ,அ

கொக்கட்டிச்சோலைத் திருத்தாந்தோன்றீச்சர பரிபாலன சபையின் அனுசரணையுடன் பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம்,க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்காக நடாத்தும் பரீட்சைக்கு உதவு கருத்தரங்கு – 2011

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, மூன்று மணித்தியாலம்
தமிழ் மொழியும் இலக்கியமும்-1,11
தமிழ் மொழியும் இலக்கியமும்-1
(i) எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக. வினாத்தாள் 1 இற்குரிய புள்ளிகள்40 ஆகும்.
(ii) 1 தொடக்கம் 40 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றிலும் (1),(2),(3),(4) என எண்ணிடப்பட்ட விடைகளில் சரியான அல்லது மிகப்பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
(iii) உமக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் ஒவ்வொரு வினாவுக்கும் உரிய வட்டங்களில் உமது விடையின் எண்ணை ஒத்த வட்டத்தினுள்ளே புள்ளடியை(ஒ) இடுக.
(iஎ) அவ்விடைத்தாளின் பிற் பக்கத்தில் தரப்பட்டுள்ள மற்றைய அறிவுறுத்தல்களையும் கவனமாக வாசித்து அவற்றைப்பின்பற்றுக.
• பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றிலும் தடித்த எழுத்திற் காணப்படும் சொல் பற்றிய வினாவுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.

1. நச்சப்படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம் பழுத்தற்று| இச்செய்யுளில் நச்சப் படாதவன் என்பதன் கருத்து யாது?
1.விரும்பப்படாதவன் 2.ஆசை கொண்டவன் 3.பொறாமை கொள்ளாதவன் 4.கோபப்படாதவன்
2); வேழத்திற் பட்டுருவுங்கோல் பஞ்சிற் பாயாது.| - வேழம்; என்பதன் ஒத்தகருத்து யாது?
1. குதிரை 2. மலை 3. வேங்கை 4. யானை
3) ஷமருள் தீர்ந்த மாசு அறு காட்சியவர்| இங்கு மருள் என்பதன் ஒத்தகருத்துச் சொல் யாது?
1. காரிருள் 2. மயக்கம் 3. தெளிவு 4. பொருள்
4) வீட்டின் தெருவோரக் கொட்டகையில் ஓர் உருவம் குந்தியிருந்தது. குந்தியிருந்தது என்பதன் எதிர்கருத்துச் சொல்.
1. அமர்ந்திருந்தது 2.படுத்திருந்தது 3.எழுந்துநின்றது 4.உட்காந்திருந்தது
5) நடுவு நிலைமையைப் போற்றுவதே நீதிபதியின் தலைமைப்பண்பு. நடுவு நிலைமை என்பதன் எதிர்கருத்துச் சொல்
1. பாராட்டு 2.வீழ்ச்சி 3.பட்சபாதம் 4.ஒத்திப்போடுதல்

• பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க
6) பாதுகாக்குமாறு ஒருவரை மற்றொருவரிடம் சேர்த்தல்,
1. ஒப்புவித்தல் 2.ஓம்படை 3.ஒப்படைத்தல் 4.ஒப்புக்கொடுத்தல்
7) இலங்கை அரசு தனது பாதீட்டில் பெரும் நிதியை யுத்தச் செலவீனங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது..- பாதீடு என்பது
1. பதிலீடு 2.வரவு செலவுத்திட்டம் 3.முதலீடு 4.பதிவேடு
8) ஒவ்வொரு நொடிப்பொழுதும் உயிரைப் பணயம் வைத்துத்தான் நாம் வாழவேண்டியிருக்கின்றது. பணயம் என்பதன் பொருள்.
1. ஈடாக வைத்தபொருள் 2. பந்தயப் பொருள்
3. திரும்பப் பெறமுடியாத பொருள் 4. முன்வைத்திடும் பொருள்
9) கடலில் கப்பல் செலுத்துபவன்;.
1. வலவன் 2. பாகன் 3. இயக்குநன் 4. மீகாமன்
10) இளைத்த காலத்தில் உதவுவதற்காகச் சேமித்து வைக்கப்படும் சேமப்பொருள்
1. ஓய்வ+தியம் 2.சேமிப்புப்பணம் 3.ஏகபோகம் 4.எய்ப்பில் வைப்பு

11) அரசுக்கு மக்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கொடுக்கும் பொருள்
1. கட்டணம் 2.தீர்வை 3.சுங்கம் 4.அரசிறை
12) எவரும் அறியாத வகையிற் பிறநாட்டு இரகசியச் செய்திகளை அறிவோர்
1. தூதுவர் 2.ஒற்றர் 3.அமைச்சர் 4.அதிகாரிகள்
13) அநுபவத்தோடு இணையாத கல்வி அறிவு
1. பட்டறிவு 2.ஒத்திகை 3.ஏட்டுச் சுரைக்காய் 4.கண்கழுவுதல்
14) போர்க்களத்தில் படை அணிவகுப்பில் முதல் வரிசையில் நிற்பது;;;,
1. காலாட்படை 2.தேர்ப்படை 3.யானைப்படை 4.தூசிப்படை
15) வாழ்த்தினும் வையினும் அவ்வப் பயனைத் தரும் சொல்,
1. பொன்மொழி 2.வசைமொழி 3.நிறைமொழி 4.பழிமொழி
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க
16) கமலன் ஓட்டைக் கையனாய் வாழ்ந்தான். ஓட்டைக்கை என்னும் மரபுத் தொடரின் பொருள்
1. பணக்காரன் 2. உலோபி 3. கொடையாளி 4. செலவாளி
17) கண்ணன் கண்டபடி கடன் கொடுத்தமையினால் வியாபாரம் கையைக் கடித்தது .- கையைக் கடித்தல் என்னும் மரபுத் தொடரின் பொருள்.
1. கைசோர்தல் 2. பொருள் நட்டமடைதல் 2. விருத்தி பெறல் 4. கையிற் கிடைத்தல்
18) நன்மாணாக்கன் ஆசிரியர் சொல்லைத் தலைமேற் கொண்டு ஒழுகினான். தலைமேற் கொள்ளுதல் என்னும் மரபுத்தொடரின் பொருள்
1. கவனமாகக் கேட்டல் 2. பக்தி சிரத்தையோடு பின்பற்றல்
3. அறிவுரையாய் ஏற்றம் 4. மூளையிற் கொள்ளல்
19) விகடகவி பொடி வைத்துப் பேசுவதிலே சமர்ததன். இங்கு பொடி வைத்துப் பேசுதல் என்ற மரபுத் தொடா.;
1. தந்திரமாகப் பேசுதல் 2. நகைச் சுவையாகப் பேசுதல்
3. நறுக்காகப் பேசுதல் 4. சுற்றி வளைத்துப் பேசுதல்
20) நெருப்பெடுத்தல் என்னும் மரபுத்தொடரின் பொருள்
1. கருப்ப+ரச் சட்டி எடுத்தல் 2. நெருப்பு மூட்டுதல்
3. வெறுப்ப மிக உண்டாதல் 4. கடுமையாகக் கண்டித்தல்
21) வருகின்றனன் - இதில் வந்துள்ள ஆண்பால் விகுதி,
1. கின்று 2. அன் 3. வரு 4. ஆன்
22) செய்பவன், செயல், காலம் ஆகியன வெளிப்படத் தோன்றி முற்றுப்பெற்று நிற்கும் சொல்,
1. பெயரெச்சம் 2. தெரிநிலை வினைமுற்று 3. பெயர்ச்சொல் 4. குறிப்பு வினைமுற்று
23) பின்வருவனவற்றுள் காலங்காட்டும் தொழிற் பெயராகவும் தெரிநிலை வினைமுற்றாகவும் வரத்தக்கசொல்,
1. பாய்ந்தான் 2. பாய்ந்தனர் 3. பாய்ந்தன 4. பாய்ந்தது.
24) “பிச்சை புகினும் கற்கை நன்றே” இதில் உம் இடைச்சொல் தந்த பொருள்,
1. எதிர்மறை 2. முற்று 3. எச்சம் 4. எண்
25) பெயர், வினைச்சொற்களைச் சார்ந்து அவற்றின் பண்புகளை உணர்த்துவதற்கென்றே அமைந்தவை,
1. உருபுகள் 2. இடைச்சொற்கள் 3. உரிச்சொற்கள் 4. சுhரியை
26) பெண்பால் விகுதி கொண்ட சொல்
1. வந்தனர் 2. வந்தது 3. வருகிறாள் 4. வந்தார்
27) பலவின்பால் விகுதி கொண்ட சொல்
1. போயிற்று 2. நடந்தன 3. வந்தார் 4. வந்தனர்

28) சென்றேன் என்பதில் வந்துள்ள இறந்த கால இடைநிலை
1. ஏன் 2. செல் 3. ன் 4. ற்
29) நன்றி மறப்பது நன்றன்று. இதன் பயனிலை
1. நன்றி 2. நன்றன்று 3. அன்று 4.மறப்பது
30) யான் என்பது நான்காம் வேற்றுமை உருபு ஏற்றால்
1. நமக்கு 2. நானை 3. யானை 4. எனக்கு
பின்வரும் பந்திகளின் பிரதான கருத்தைத் தெரிவு செய்க
31) ஆசைப்படாதவர்கள் மனிதர்களில்லை.அதற்காக எல்லாவற்றுக்கும் ஆசைப்படவும் கூடாது. அளவு கடந்தும் ஆசை கொள்ளக் கூடாது.
1. ஆசைப்படக் கூடியவற்றில் அளவோடு ஆசை வைத்துக் கொள்ளுதல் நல்லது. 2. ஆசை மோசமானது. 3.. மனிதர்கள் ஆசைப்படக் கூடியவர்கள். 4. எல்லாவற்றிலும் ஆசை வைத்துக் கொள்ளுதல் நல்லதல்ல
32) ஒருவரோடு ஒருவர் உறவு கொள்ளுவது இயல்பானது. எதிர்பார்ப்போடு உறவு கொள்வோர் தம் எதிர்பார்ப்பு நிறைவேறாவிடில் மன உழைச்சலுடன் வெளியேறி விடுவர். அவ்வாறு அன்றி உறவு கொள்வோர் இன்பத்திலும் துன்பத்திலும் நெடுங்காலம் இணைந்திருப்பர்.
(1) இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுப்பதே நல்ல உறவு.
(2) ஒருவரோடு ஒருவர் உறவு கொள்ளுவது இயல்பானது.
(3) துன்பமும் இன்பமும் உறவுக்குத் தடையாக உள்ளது.
(4) உறவு மன உழைச்சலை ஏற்படுத்தும்.
பின்வரும் வினாக்களிலுள்ள வாக்கியத்தின் முற்பகுதிக்குப் பொருத்தமான முடிக்கும் பகுதியைத் தெரிக

33) அங்கே நிற்கும் குழந்தைகள்,
1. அவர்களுடையதல்ல. 2. அவர்களுடையவரல்லர். 3. அவர்களுடையதன்று. 4.அவர்களுடையனவல்ல.
34) நீர் கூப்பிட்டிராவிட்டால் அவர்;,
1. போய்விட்டிருந்தார். 2. போய்விட்டிருப்பார். 3. போய்க்கொண்டிருக்கிறார் 4.. போய்விட்டார்.
35) ஆயிரம் தாரகைகள் சேர்ந்தாலும்,
1. ஒரு சந்திரனுக்கு நிகராகுமா? 2. ஒரு சந்திரனை ஒப்பனவா?
3. ஒரு சந்திரனை நிகராகாது 4. ஒரு சந்திரனை ஓக்கும்
பின்வருவனவற்றுள் சரியாக எழுத்துக் கூட்டப்பட்ட சொல்வரிசையைத் தெரிவு செய்க.
36) 1.அரசியல், உலகியல், தொல்லியல், நல்லியல் 2. சந்தை, மலக்கறி, நாளங்காடி, சம்பளம்.
3. தினைக்களம், கல்விற்கந்தோர், உளவியல், மாக்சிஸம் 4 புடைவை, அகழ்வாராட்சி, பூந்த்தோப்பு
பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றிலும் புள்ளிக் கோடிட்ட இடத்தை நிரப்புவதற்கு மிகப்பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க.
37) கிளி தன்........... மாம்பழத்தைக் கோதியது.
1. அளகினால் 2.அலகினால் 3.அழகினால் 4.அலகிணால்

38) ................ கண்ணீர் விடுவது போன்று மழைத்துளி விட்டுவிட்டு விழுந்தது.
1. வாணம் 2.வாநம் 3.வானம் 4.வாநனம்
39) அளகவல்லி பிடித்துவந்த ........... பயத்தால் நடுங்கியது.
1. ஆண்மயில் 2.அளகம் 3. அளகு 4.அழகு
கீழே சில வாக்கியங்கள் ஒழுங்கின்றிக் காணப்படுகின்றன.அவ்றை ஒழுங்குபெற வைத்தால் கட்டுக்கோப்பான பந்தியொன்று அமையும். அவ்வாறு பந்தியை அமைப்பதற்கு மிகப் பொருத்தமான வைப்பு முறையைத் தெரிவு செய்க.
40) (அ) அக்குணங்களை ஆள்பவர் ஆண்மையுடையோர்.
(ஆ) சான்றாண்மை உள்ளவரே சான்றோர்.
(இ) அக்குணங்களில் எதுவும் தன்னைவிட்டுப் பிரிந்து போய்விடாமல் அடக்கி ஆண்டு வாழுபவர் சான்றாண்மை உடையோர்.
(ஈ) ஒழுக்கத்தை உயிரிலும் பெரிதாகக் கருதுவது நற்குணங்களில் ஒன்று.
(உ) நற்குணங்கள் பலவற்றைப் படைத்தோர் நல்லோர்.
1. இ,ஆ,அ,உ,ஈ 2. உ,அ,ஈ,ஆ,இ 3. இ,அ,ஈ,உ,ஆ 4. இ,உ,ஆ,ஈ,அ

Sunday, November 20, 2011

இலட்சியக்கனவு

அரவிந்தனின் மனசில் எப்பொழுதும் ப+ரணிதான். ஊஞ்சள்ஆடிக்கொண்டிருப்பாள். ப+ரணி அரவிந்தனின் தங்கை, சிறுவயதில் தாயையும் தந்தையையும் இழந்து போன ப+iணிக்கு அரவிந்தன் தான் எல்லாம். வயது பதினெட்டாகும் பூரணி ஒர் வடிவான பெண.; செந்தாமரையை பழிக்கும் அவளது முகத்தை பார்த்த ஆண்கள் யாராக இருந்தாலும் ஏNழுழு பிறவிக்கும் அவளே மனைவியாக வரவேண்டும் என்று நினைப்பார்கள். அவள் அவ்வளவு அழகு.
தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் காணியை பொன் விளையும் நிலமாக நினைப்பவன் அரவிந்தன். தரம் 13ல் கல்வி கற்கும் ப+ரணியை நன்றாக படிப்பித்து பட்டம் பெற வைத்து ஒரு சமூகத்தொண்டனாக பார்க்க வேண்டும் என்பது அரவிந்தனின் உறுதியான நம்பிக்கை. அதுவே அவனது மூச்சு: இலட்சியம் எல்லாம் துரதிஸ்டவசமாக குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்ட அரவிந்தன் இளமையிலே கல்வியை இழந்தான். வயல் செய்து அதிலிருந்து வரும் வருமானத்தை கொண்டு குடும்ப பொறுப்பை நேர்த்தியாக செய்து வந்தான். ஷஅண்ணா! சுரஸ்வதி ப+சைக்கு காசு வேணுமஷ், ஷஅண்ணா! சோதினைக்கு காசு வேணுமஷ் ஷஅண்ணா! ஆசிரியர் தின விழாவுக்கு காசு வேணும்ஷ என்று ப+ரணி கேட்கும் எல்லா சந்தர்ப்பத்திலும் அவளுக்க அவன் இல்லையென்று சொல்லியதில்லை தன்னிடம் இல்லாவிட்டாலும் யாரிடமாவது கைமாறிக்கொடுத்து விடுவான்.
போன போக வயல் செய்கை அவனது கையை கடித்துவிட்டது. தலையளவுக்கு கடன் ஏறிவிட்டது. ப+ரணியை படிப்பது கூட மிகவும் க~;டமாகிவிட்டது. பாடசாலைக்கற்றலுடன் மேலதிக வகுப்பறைகளும் அவசியமான இன்றைய காலகட்டத்தில் குடும்ப வறுமை ப+ரணிக்கு இடைய+ராக இருந்து .மேலதிக வகுப்புகளுக்கு செல்வதை படிப்படியாக ப+ரணி குறைக்கத் தொடங்கினாள். இவையெல்லாம் அரவிந்தனுக்கு கவலை மேல் கவலை கொள்ள வைத்தன. எனினும் அவன் சோரவில்லை. வீட்டுத்தோட்டம். ஒன்றை ஆரம்பித்து அதன்மூலமாக வரும் பணத்தைப் ப+ணிக்கு செலவு செய்தான்.
பூரணியின் மனச் சுவரிலே, தன் அண்ணனிடம் சொல்ல வேண்டிய விடயம் ஒன்று சிறகடித்து பறக்க முற்படுமே பறவை போன்று மோதுண்டு திரிந்தது. அது அவளுக்கும் விமலனுக்கும் இடையிலான காதல் விவகாரம.; ப+ரணி அவளது காதல் விவகாரத்தை அரவிந்தனிடம் கூறுவதற்கு முன்பே அரவிந்தன் ஒருவாறு அறிந்து கொண்டான். ஷப+ரணி ! நீ விமலனை காதலிக்கிறாயா?ஷ என்று அரவிந்தன் கேட்டபோது உண்மையில் ப+ரணியின் இதயம் சுக்கு நூறாகி உடைந்து போனது ஷநான் ..அண்ணா.. விரும்பமில்லை... எனக்கெண்டு சொல்லியும..; அண்ணா.. என்று ப+ரணி கூறிய போது ஷதங்கச்சி நிப்பாட்டு நான் எல்லாத்தையும் அறிஞ்சன் ஏயல் எழுதமட்டும் பொறுத்துக்கொள் நான் விமலனட்டையும் சொல்றன்ஷஷ. சமாளித்துக் கொண்டான் அரவிந்தன் ப+ரணியும் சொற்படி நடக்கத் தொடங்கினாள்.
காலங்கள் நாட்களை விழுங்கி ப்பெருதோடின. பரீட்சையை திருப்தியாக எழுதினாள் பூரணி. பெறுபேறும் வெளிவந்தது. மாவட்ட மட்டத்தில் ப+ரணி ஐந்தாவது நிலையாக வந்தாள்.அவள் அடைந்த சந்தோ~த்திற்கு அளவே இல்லை.. தனது அண்ணனின் இலட்சியத்தை நிறைவேற்றும் காலம் கைகூடிவிட்டதை நினைத்து பெருமிதம் அடைந்தாள். ஆறுநாட்களுக்கு முன் வயலுக்குச் சென்ற தன் அண்ணன் அரவிந்தனிடம் தான் பெற்றுக்கொண்ட பெறுபேற்றை சொல்லுவதற்காக வழி எங்கும் பார்வைவிரிய காத்து நின்ற போது நாலுபேர் அரவிந்தனை பிணமாக தூக்கி வந்து வீட்டு வாசலில் கிடத்தினர். ஏதோ வி~யந்து தீண்டி அரவிந்தன் இறந்து விட்டதாக செய்தி பரவியது ஷஷஅரவிந்தன் இறந்து போனாலும் ப+ரணியை படிப்பிச்சிட்டான்ஷஷ என்று ஏழெட்;டுப்பேர் சந்தியில் கூடி நின்று கதைத்துக் கொண்டனர்.

மனமாற்றம்



படகை நிறுத்தி விட்டு பக்கத்தில் இருக்கும் பற்றைக்குள் போன பாதையோட்டிகள் எப்போது வருவார்கள் என்று பார்த்துப்பார்த்தே பாதையில் நின்றவர்களின் கண்கள் அலுத்துவிட்டன. மண்முனை படகுப்பாதையில் ஏறிநின்ற மாரிமுத்துவின் மனசு முழுதும் சந்தோ~ப்புயல். “அடியே மச்சாள் நாளைக்கு புள்ளைக்கு கல்யாணம்டி. காட்டு ஒன்டும் அடிக்கல்ல தெரிஞ்சாக்கள் கொஞ்சப்பேருக்கு வாயால சொல்றன். கட்டாயம் வந்திரனும்”. என்றாள் பக்கத்தில் நின்ற வள்ளியிடம். இருவரும் நீண்ட காலத்து நண்பர்கள். மீன்பிடிக்க, கொள்ளியெடுக்க, உப்பட்டி கட்ட என்று எல்லா இடங்களுக்கும் இருவரும் செல்வதுண்டு. அந்த நெருக்கத்தில் பாதையில் நின்றவர்களையும் பாராமல் வள்ளியுடன் சத்தமாக கதைத்துக்கொண்டிருந்தாள்.
“யாரு மாப்பிளை” என்றாள் வள்ளி. “மாப்பிள தங்கமானவரு. பேரு வேலன். இங்கதான் பக்கத்தில ப+ஞ்சாமடுவில இருக்காரு. புள்ள வகுப்புக்கு போகக்குள்ள லவ் பண்ணித்து மனசப் பிரிக்க மனம் இல்ல விட்டுத்தன். என்ன செய்ற எல்லாம் விதிப்படியே” மாரியின் பதில் தொடர்ந்தது. “ரெண்டெடத்த சாத்திரம் கேட்டாச்சு. யோடிப்பொருத்தம் பிரமாதமாம். இதவிட்டா முப்பத்தெட்டு வயதாகுமாம். நீயென்னடி செல்றா? “இந்தக் காலத்தில் நல்ல மாப்பிள எடுக்கிறதே கஸ்ரம். நீ கொடுத்து வைச்சவ. அது சரி சீதனம் கீதனம் ஒண்டும் மாப்;பிள கேக்கல்லையா?” என்றாள் வள்ளி.
“அப்படி ஒண்டும் கேக்கல்ல நாங்களும் கதைக்கல்ல. அவசரமா காசு ஒரு லெட்சம் வேணும் பிறகு தாறன் எண்டு பிள்ளட்டகேக்க பிள்ளையும் வட்டிக்கு வாங்கி ஐம்பதாயிரம் கொடுத்தது. அவ்வளவுதான் கொடுக்கல் வாங்கல். வீட்டு நடப்பு வந்து போற அவருக்குத் தெரியும் தானே ! சொல்லியா தெரியணும்!”
“ பிடிச்ச பிடிய நல்லாத்தான் பிடிச்சிருக்கா எத்தன நாளுக்கு கஸ்ரப்படுற. கடவுளுக்கும் தெரியும் தானே மாரி” என்றாள் வள்ளி.
“பாத அடிக்கப் போகுது கவனமா பிடிச்சுக் கொள்ளுங்க” பாதையை ஓட்டுபவர் சொல்லி எஞ்சினை நிற்பாட்டினாhர். கதைத்துக்கொண்டு நின்றதில் இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை.
கையில் இருந்த இரண்டு கூடைகளையும் தூக்கிக்கொண்டு பாதையை விட்டு இறங்கினாள். தான் வைத்திருந்த கூடைகள் மிகவும் பாரமுடையவை. அதனால் அதனைத் தூக்கிக் கொண்டு நடந்து போக அவளாள் முடியவில்லை. குடும்ப வருமானத்தைப் பார்த்தால் ஓட்டோவில் போக முடியாது. ஆள் உதவி இல்லாத அவள் என்ன செய்ய முடியும். வள்ளியுடன் அவளும் போய் ஓட்டோவில் ஏறினாள். ஓட்டோ வீட்டடியில் நின்றது. “எவ்வளவு தம்பி?” “முப்பது ரூபாய்”. ஓட்டோக்காரன் சென்று விட்டான். “கட்டாயம் வருவண்டி” வள்ளியும் சென்று விட்டாள்.
பொழுதும் கருகத் தொடங்கிவிட்டது. விடிந்தால் கலியாணம். தேடிஎடுக்கவேண்டியவை வாங்க வேண்டியவை எல்லாம் வாங்கி முடிந்து விட்டது. கலியாணத்துக்கென்று கந்தப்போடியாரிடம் வட்டிக்கு வாங்கிய இருபத்தையாயிரம் ரூபாவும் கிட்டத்தட்ட முடியும் தறுவாய்க்கு வந்து விட்டது. வீட்டு மூலையில் வாங்கி கட்டித்தூக்கி வைத்திருந்த வாழைக்குலைகள் பழுத்து மணம் வீசிக் கொண்டிருந்தன. நாளை திருமண பந்தத்தில் இணைப்போகும் தனது மூத்தமகள் மாலாவை நினைத்தால் மாரிக்குப் பெருமை. இருபத்தெட்டு வயதாகும் மாலா நல்ல குணநலம் மிக்கவள். எந்தவிதமான கெட்ட நடத்தைகளும் இதுவரைஅவளிடம் காணப்பட்டதில்லை. குடும்ப வாழ்வில் பின்பற்ற வேண்டிய பல புத்திமதிகளை பல நாட்களாக கூறியிருக்கிறாள். அப்போதும் தன் மூன்று பிள்ளைகளையும் கூப்பிட்ட மாரி “சொல்லவேண்டியாக்களுக்கு எல்லாம் சொல்லித்தன.; நாளைக்கு ஏழுமணிக்கு கழுத்தில தாலி ஏறனும். மாப்பிளத்தத்திக்கு ஒரு கெழமைக்கு மொதல்ல சொல்லியாச்சி. அவயளுக்கு நடமொற தெரியும் தானே. நீங்க நாளைக்கு நாலுமணிக்கு எழும்பி நாளைய வேலையள சீக்கிரமாச் செய்யணும்.”
மணப்பந்தல் அலங்கரிக்கும் வேலை மும்முரமாக இடம் பெற்றுக்கொண்டிருந்தது.படலையை உயர்த்திக் கட்டி இரண்டு பக்கமும் சுந்தரன் தலைமையில் வாழைமரம் கட்டுப்பட்டுக் கொண்டிருக்கின்றது. “ வாழ மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் கல்யாணம். அந்த ஐர மீனுக் குஞ்சிக்கெல்லாம் ஊர் கோலம்…….” பாட்டைப்படித்தான் பாலன்: ஊரில் நடக்கும் எல்லாக் கலியாணத்திற்கும் அவன் போவான் : சிரிக்க வைக்க வேண்டுமென்றே ஏதாவது பாட்டு அல்லது ஏதாவது சொல்லுவான்.
“மாரியக்க வாங்கின கயிறு கிடக்கா” வாழைமரம் கட்டிக்கொண்டிருந்த சுந்தரன் கேட்டான். “ஓ….! வாறன்” மாரி ஒரு முடிச்சுக் கயிறோடு வெளியால் வந்தாள். எல்லா வேலையும் முடிந்து விட்டது. ஓறுத்துக் கிடந்த வானம் கருக்கொண்டு கிடந்தது போல அவளது வீடு வேட்கை ப+ர்த்துக் கிடந்தது.
‘மறந்து போய்த்தன் கந்தண்ண பாலுகொண்டு வந்தவரா? மாலா” என்றாள் மாரி “ஓம் அம்மா பத்துப் போத்தல் கூடக் கொண்டு வரச் சொன்னெண்டு முப்பது போத்தல் கொண்டு வந்தவரு”
நாளை நடக்கப் போகும் சந்தோசமான நிகழ்வை நினைத்தப் பார்த்த மாலாவின் உள்ளம் ப+ரிப்பால் விரிந்தது தனது அம்மாவுக்கச் சுமையாக இருந்த தனது திருமண விடயம் நிறைவேறுவதால்அம்மா இனி சந்தோசமாக , மனப்பாரம் குறைந்து வாழ முடியும் என்னும் நினைப்பு அவளுக்கு.
மாரியின் கணவன் அவளை விட்டு பிரிந்து போய் பதினாலு வரு~ம். ஒரு கிழமையில் எப்படியும் ஒரு நாள் தப்பினால் இரண்டு நாள்தான் அவளது புரு~ன் வீரன் வேலைக்கு போவான். உழைப்பது குடிக்கவும் போதாது. அப்படியிருந்தும் இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்து கடைசியில் மூன்று பெண்பிள்ளைகளையும் விட்டுப்போட்டு போன பொறுப்பற்றவன் அவன். எனினும் மாரி சோரவில்லை. குடும்பத்தலைவியாக மாரி நெல்லுக்குத்தி அரிசி இடித்து விற்று தன் குடும்பத்தை இந்த நிலைவரக் கொண்டு வந்து விட்டாள். நாளை நடைபெறவிருக்கும் திருமண நாளுக்கு வாழ்த்துச் சொல்வது போல வானமும் சிறிது இருண்டு ஒரு பாட்டம் மழையும் பெய்து விட்டது.
இரவு எட்டு மணியாகிவிட்டது. வரவேண்டியவர்கள் வந்து முகத்தைக் காட்டிச் சென்று விட்டார்கள். இனி அவர்கள் நாளைக்குத்தான். மாலாவின் கையடக்கத் தொலைபேசி ஒலித்தது. போய்ப் பார்த்தாள். அவளது மாப்பிள்ளை. சந்தோ~சப்ப+க்கள் உள்ளத்தில் மலர, ‘கலோ’ என்றாள். நாளைக்கு நான் கட்டாருக்கு போறன் வந்துதான் கல்யாணம்”. போன் சத்தமற்று அமைதி கொண்டது. நெஞ்சில் இடிவிழுந்தது போல இருந்தது. கண்களில் பெருந்துளியாய் நீர் சுரக்க “ அம்மா” என்று விழுந்து அழத்தொடங்கினாள். மாரி ஓடிவந்து “என்ன மகள் என்ன?” கத்திக் கொண்டு கேட்டாள். “அவரு நாளைக்கு கட்டாருக்கப் போகப் போறாராம்”. எல்லோரும் சேர்ந்து அழுதனர். அவல ஓலம் போலவே ஊரெங்கும் ஒலித்தது. யாரோ இறந்து விட்டார்கள் என்று நினைத்து ஊரிலுள்ளோர் ஓடிவந்தனர். முற்றமெல்லாம் சனக் கூட்டம் நிரம்பி வழி;ந்தது.
வேலனின் சமீப காலச் செயற்பாடு , பொய்யாகிப்போன அவனது வார்த்தைகள் எல்லாம் அவன் இனி ஒரு போதும் தன்னை திருமணம் செய்யமாட்டான் என்பதனையே மாலாவுக்க உணர்த்தின. ஏங்கி ஏங்கி அழுதாள். என்ன செய்வதென்று தெரியாமல் தினறினாள்.
பலரும் ஆறுதல் கூறிச் சென்றனர். “வேலனைச் சம்மதிக்க வைச்சி நாளைக்கு கலியாணத்த முடிச்சிரலாம்”. ஊர் பெரியவரும் அப்படித்தான் கூறினார். மாரி பலதையும் யோசித்தாள். சந்தோ~க்களிப்போடு செய்த அத்தனை வேலைகளும் கவலைமேல் கவலை கொள்ளச் செய்தன அவளுக்கு. வேலன் கட்டாருக்கு போவது உறுதியாக தெரிந்து விட்டது. நேரம் கடந்து கொண்டே இருந்தது. கலகலப்பு ஒய்ந்து விட்டது.
மாலாவின் போன் மீண்டும் ஒலித்தது. போனை கதைக்க மாலாவுக்கு பிடிப்புற்று இருந்தது. மாரி போனை எடுத்து “கலோ” என்றாள். “நான் சீலன் கதைக்கிறன்”. சொல்லுமகன்”. “நடந்தது எல்லாத்தையும் அறிஞ்சன் மாமி. மாலாவை நான் கட்றன் எண்டு ஏற்கனவே சொன்னன். உங்கட மாலா கேட்கல்ல மாமி. மானம் கெட்டவன் எண்டு என்ன நினைக்காதிங்கோ மாலாவோட நான் வச்ச காதல் இன்னும் குறையல்ல. மாலா செரியண்டா நான் நாளைக்கு கலியாணத்திற்கு செரி. கேட்டுத்து சொல்லுங்க”. அவ்வளவுதான் சீலனின் தொடர்பு நிறுத்தப்பட்டுவிட்டது. மாரியின் மனசில் புதிய நம்பிக்கை ஒளி கொண்டது. சீலன் தன்னிடம் மாலாவைக் கல்யாணம் செய்து தரும்படி பலதடவை கேட்டதையும் அவனுக்காக மாலாவிடம் பல தடவை கதைத்ததையும் நினைத்துப்பார்த்தாள்.
நேராக மாலாவிடம் சென்றாள். சீலன் கூறியதைக் கூறினாள். இருவரும் கண்கள் நனைய கட்டிப்பிடித்து அழுதார்கள். சிறிது நேரம் மாலா மௌனமாக இருந்தாள்: மனதை மாற்றிக் கொண்டாள். வாழவென்றே துணிந்தாள். “சீலன்விருப்பம் கேட்டு கெஞ்சியும் ஒண்டும் சொல்லாத நான்தான் முட்டாள். அம்மா! நாளைக்கு கல்யாணத்திற்கு நான் சரி”. குரல் கணக்க கூறினாள் மாலா. அரைத்தூக்கத்தில் கிடந்த இளைய மகள் எழுந்து “யாரம்மா மாப்பிள்ளை”. நம்மட சீலன் அத்தான்தான்………

உலக இலக்கியங்களின் வரிசையில் ஸ்காண்டிநேவிய நாவல்கள் பெறும் முக்கியத்துவம்

1. அறிமுகம்
உலக இலக்கியங்களின் வரிசையில் ஸ்காண்டிநேவிய நாவல்களுக்குத் தனித்துவமான இடமுண்டு. நோர்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளை ஸ்காண்டிநேவிய நாடுகள் என்று அழைக்கின்றனர். இவை ஒருவகையான புவியியல் தன்மை கொண்ட நாடுகளாக உள்ளன. அதனாலேயே உலக இலக்கியங்கள் என்னும் பார்வையில் பொதுவான மன உணர்வுகளைத் தாங்கித் தனித்துவமாக வெளிவரும் நூல்களில் பெரும்பாலானவை இந்நாடுகளிலிருந்து வெளிவருகின்றன. இதனை இன்னொரு விதமாகச சொல்வதாயின் இத்தன்மை இந்நாட்டு நாவல்களின் பிரதான பண்பு என்றும் கூறலாம்.
உலக இலக்கியங்களை நோக்குகின்ற போது அவை பல்வேறு வித்தியாசப்பட்ட தன்மை கொண்டவை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அடக்குமுறைக்கு எதிரானவை(1), பொதுவுடமைக் கருத்துக்களைக் கொண்டவை(2), பெண்ணிய(3), தலித்திய (4)சிந்தனையுடையவை, பொதுவான மன உணர்வுகளைத் தாங்கியவை(5) என்றவாறு வெளிவந்துள்ளன. இப்பண்புடைய இலக்கியங்கள் அனைத்தும் எல்லா நாட்டு அரசியல், பண்பாட்டு சூழல்களையும் பிரதிபலிக்கக் கூடியவை என்று கூறிவிட முடியாது. குறிப்பாகச் சொல்வதாயின் அடக்குமுறைக்கெதிரான குரல்கள், பலஸ்தீனம், ஆபிரிக்கா, இலங்கை போன்ற அரசியல் போராட்ட சூழ்நிலைகளை முன்போ, பின்போ கொண்ட நாடுகளுக்கே பொருந்தும். அதே போன்று தலித்தியம், இந்தியாவுக்கு பொருந்தும், பெண்ணியம் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலேயே கூடுதலாகப் பேசப்படுகின்றது.
ஆனால் காதல், பசி, இரக்கம், அன்பு போன்ற மன உணர்வுகள் எல்லோருக்கும் பொதுவானவையாக, பொருந்தக்கூடியனவாக உள்ளமையினை அவதானிக்கலாம். இப்பண்புகளே ஸ்காண்டிநேவிய நாடுகளின் நாவல்களின் முக்கியமான கருவாக அமைந்து உள்ளன. அதனால் இத்தகைய பண்புகளைக் கொண்ட ஸ்காண்டிநேவிய நாவல்கள் உலக இலக்கியங்களில் முக்கியமானவையாக உள்ளன எனலாம். இலக்கியமும் அரசியலும் மிகவும் இணைந்ததாக இருக்கும். இலக்கியத்தைப் புரிந்து கொள்வதற்கு குறிப்பிட்ட ஒரு நாட்டின் அரசியல் பற்றிய புரிதல் அவசியமானதொன்றாகும். ஆனால் ஸ்காண்டிநேவிய நாவல்களில் இத்தன்மையைக் காண முடியாது. அவை படிப்பவர்களை மிகவும் ஈர்க்கக் கூடியனவாக மன உணர்வுகளைத் தட்டியெழுப்பக்கூடியனவாக உள்ளன. அவ்வகையில் உலக இலக்கியங்களுள் ஸ்காண்டிநேவிய நாவல்களுக்கு பிரதானமான இடம் உண்டு என்று துணியலாம். இத்தன்மையை விளங்கிக் கொள்வதற்கு இங்கு பசி (நோர்வே), நிலவளம் (நோர்வே), குள்ளன் (சுவீடன்), மதகுரு (சுவீடன்) ஆகிய நான்கு நாவல்கள் எடுத்தாளப்படுகின்றன.
2. ஸ்காண்டிநேவிய நாவல்கள்
2.1. ஒரு எழுத்தாளனின் வறுமை நிலை:- பசி
ஸ்காண்டிநேவிய நாவல்களுள் ‘நோர்வே’ நாட்டைச் சேர்ந்த நட்ஹாம்சன் எழுதிய பசி நாவல் தனித்தவமானது. நாவல் இலக்கியத்தில் பலவிதமான சோதனைகள் செய்து வெற்றிபெற்ற நட்ஹாம்சனின் முதல் நாவல் இது, பல நாவல்களை எழுதியுள்ளார். இவரது நிலவளம் 1920 இல் நோபல் பரிசு பெற்றது. பசி ஒருவனின் உடலையும் உள்ளத்தையும் அவனது கற்பனையையும் எவ்வாறு வாட்டுகின்றது என்பதை மிகவும் சிறப்பாக இந்நாவல் சொல்லுகின்றது. அவ்வகையில் உலக நாவல் இலக்கிய வரிசையில் ஸ்காண்டிநேவிய பசி நாவலுக்கு முக்கியமான இடம் உண்டு எனலாம்.
பசி, எல்லா மனிதர்களுக்கும் பொதுவான ஒரு உணர்வு. பணம் கையில் வைத்தருப்பவன் பசி ஏற்படும் போது அதனைச் சாதுரியமாக வென்று விடுகிறான். அது அவனுக்கு பெரிய பிரச்சினையாகவோ, சவாலாகவோ இருக்காது. ஆனால் பணம் இல்லாவிட்டால் பசி, ஒரு மனிதனுக்குச் செய்ய வேண்டிய அத்தனை அட்டூழியங்களையும் செய்துவிடும். இந்நாவலில் நிரந்தரமான வருவாய் தரும் தொழிலற்ற ஒரு எழுத்தாளனை பசி எவ்வாறு துன்புறுத்துகிறது, பணம் கிடைக்கும் போது அவனுடைய மனநிலை எத்தகையது, பணம் தீர்ந்துவிட்ட பின் அவனுடைய மனநிலை எத்தகையது என்பதை மிகவும் சிறப்பாகக் காட்டியுள்ளார் ஆசிரியர். இந்நாவலை மொழி பெயர்த்த க.நா.சுப்ரமண்யம் அந்நூலின் முன்னுரையில்,
“பசியினால் ஓர் எழுத்தாளன் படும் அவதியைக் கூட ஒரு நவினத்துக்கு கருப்பொருளாகக் கொள்ள முடியும் என்று சிறந்த முறையில் இதனை ஆசிரியர் படைத்துள்ளார்”01
என்று கூறியுள்ளமை அதன் சிறப்பை மேலும் அழுத்தியுரைப்பதாக உள்ளது.
நாவலின் கதையைச் சுருக்கமாகக் கூறுவதனால், இந்நாவலில் வரும் தலைமைப் பாத்திரம் நிரந்தர தொழிலற்ற ஒருவறிய எழுத்தாளன். பத்திரிகைகளுக்குக் கதை எழுதுகிறார். அதில் நம்பிக்கை கொண்டு பணத்திற்காகக் காத்திருக்கிறார். பணம் வருகின்ற போது சந்தோசப்பட்டு பின் பணம் முடிந்ததும் பசியால் வாடிவிடுகிறார், கற்பனை, எழுத்தாற்றல் அனைத்தையும் இழந்துவிடுகின்றார். இருப்பதற்கும் நிரந்தர இடமில்லாது தவிக்கும் அவர் பசியைத் தாங்கிக் கொள்ள முடியாது மரத்துண்டுகளை, எலும்புத் துண்டுகளைக் கடித்து உண்ணுகிறார். அவருடைய பசிக்கும் வேதனைக்கும் இடையே அவர் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொள்கிறார். அவளுக்கு முத்தமிடுகிறார், பின்னர் தன்னை முழுமையாகப் பிடித்திருந்த பசியாலும் அதனால் ஏற்பட்ட மனநிலையாலும் அவ்வுறவிலிருந்து விடுவித்துக் கொள்கிறார். நாடகத்தை எழுதத் தொடங்கி அதனைக் கிழித்து எறிந்து விடுகிறார். சில நேரங்களில் எழுதவும் முடியாது பசியால் வாடிக்கொள்கிறார். பின்னர் சரக்கு ஏற்றும் கப்பல் தலைவனுடன் வேலை தொடர்பாகக் கதைத்து அக்கப்பலில் ஏறிச்செல்கிறார்.
நாவலின் சிறப்புப் பற்றி பின்வரும் பகுதிகளை எழுத்தாள முடியும். (பின்வருமாறு நாவல் தொடங்குகிறது)
“அந்த நாட்களில் நான் கிறிஸ்டியானியா நகரில் ஊர் சுற்றிக் கொண்டு பட்டினியாகத் திருந்தேன். மிகவும் சிறந்த நகரம் கிறிஸ்டியானியா……..”02
பின்னர்,
“சென்ற சில நாட்களாகவே நான் சில்லரைக்கே க~;டப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒன்றன் பின் ஒன்றாக என் சாமான்களை எடுத்துப்போய், “மாமாவுக்கு” (அடகு பிடிப்பவனுக்கு) அர்ப்பணம் செய்தாகி விட்டது. எனக்கோ எரிச்சலும் கோபமும் தினத்துக்குத் தினம் அதிகரித்துக் கொண்டிருந்தது. தலை சுற்ற நான் சில நாட்களுக்குப் படுக்கையிலேயே கிடக்க வேண்டியதாக இருந்தது உண்டு. எப்பொழுதாவது ஒரு சமயம், அதி~;டம் இருக்கும் போது, ஏதாவது ஒரு பத்திரிகையிலிருந்து ஏதாவது ஒரு கட்டுரைக்கு ஐந்து பணம் வரும்”03
என்று கதை நகர்த்தப்பட்டு
“எனக்கு அவன் வேலை தந்தான்………..
கடலில் போய்க் கொண்டிருக்கும் போது மேல் தளத்துக்கு வந்து கிறிஸ்டியானியா நகரத்திடம் விடை பெற்றுக் கொண்டேன். இரவில் நகரத்து வீடுகளின் ஜன்னல்கள் பளபளத்தன.
இப்ப சத்தியா விடை பெற்றுக் கொள்கிறேன், அழகிய நகரே’’04
என்றவாறு கதை முடிவடைகின்றது. இவ்வகையில் நோக்கும் போது ‘பசி’ நாவல் சிறந்த ஒரு இலக்கிய படைப்பு என்று கூறலாம்.
2.2 நிலத்தின் பயன்பாடு:- நிலவளம்
இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றான ‘நிலவளம்’ பலரதும் கவனிப்பைப் பெற்றுத் திகழ்கின்றது. நட் ஹாம்சன் என்பவரால் எழுதப்பட்ட நோர்வே தேசத்து நாவல் இது.
நிலத்தின் முக்கியத்துவத்தையும் அதன் வளத்தையும் அதனோடு தொடர்புபட்ட பண்ணை வாழ்க்கையையும் இந்நாவல் எடுத்துக் கூறுகின்றது. பொருள் சார்ந்தும், கூறும் முறைசார்ந்தும் எப்போதும் எக்காலத்திற்கும் எத்தேசத்திற்கும் பொருந்தி நிற்கக்கூடிய தன்மை இந்நாவலுக்கு உண்டு. அத்தகைய வகையில் இந்நூலில் முழு நிறைவைப் பெற்றுத் திகழ்கின்றது எனலாம். மேலை நாட்டு நாகரீகம் என்று சொல்லப்படுவதன் வளர்ச்சியிலே நிரந்தரமான பல உண்மைகளை மனித குலம் மறந்துவிட முற்படுகிறது. இவ்வாறு மறந்து விடுவதால் ஆபத்து ஏற்படும் என்பதை ஆசிரியர் இந்நாவலினூடாகச் சொல்ல வருகின்றார்.
நாம் தினமும் காணும் சாதாரண மக்களே நாவலில் வரும் பாத்திரங்களாக உள்ளனர். பண்ணை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்நாவலில் ஐஸக் (குடியானவன்) இங்கர் (அவன் மனைவி) ஆகிய இரு பாத்திரங்களே பிரதானமாக உள்ளன. அதாவது இப்பாத்திரங்களினூடாகவே நாவலின் பிரதான கதை நகர்த்தப்படுகின்றது. இந்நாவலில் ஜஸக்கின் பிள்ளைகள் (எல்யூஸிஸ், ஸிவெர்ட், லெபல்டின், ரிபெக்கர்) இங்கரின் உறவினர் (ஓலைன்) இரு பண்ணைக்காரர்கள் (ப்ரெட், ஆக்ஸெல் ஸ்டிராம்) பணக்காரன் ஆகிவிட விரும்பிய கடைக்காரன் (ஆரண்ஸென்) எனப்பல பாத்திரங்கள் வருகின்றன.
வாழ்க்கைக்கு உதவியாக மண்சார்ந்த இயற்கை வளங்கள் இருக்கின்றபோது அதனைப் பயன்படுத்தி வாழத்தெரியாமல் வேறுவழிகளில் பண ஆசை கொண்டு உழைக்க முற்படுபவர்களின் வாழ்வு இந்நூலில் தோற்றுப் போகின்றது, அவர்கள் வாழ்வை இழந்து போகின்றனர். இதில் வரும் ஆரண்ஸெக் என்னும் பாத்திரம் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு.
நாவலில் தொடக்கம் முதல் முடிவு வரை நிலத்தின் முக்கியத்துவமே பேசப்படுகின்றது, அதனோடு தொடர்புபட்ட விடயங்களே பேசப்படுகின்றன. வளமான நிலத்தைத்தேடி புறப்படுகின்றான் ஐஸக்.
“இடத்தைக் கண்டு பிடிப்பதுதான் மிகவும் சிரமமான காரியம். கண்டு பிடித்து விட்டான் இதுவரை இந்த நிலம் யாருக்கும் சொந்தமானதில்லை. இப்போது இது இவனுடையது. இப்போது, இனி அவனுக்கு வேலை நிறைய இருக்கிறது”05
பின் நிலத்தைப் பயன்படுத்தி வேலைகள் செய்யத் தொடங்குகிறான், பண்ணை அமைக்கின்றான். இங்கரும் இதில் இணைந்து கொள்கிறார் வாழ்வு தொடங்குகிறது.
“வஸந்த காலம் வருகிறது தன் நிலத்தைத் திருத்தி அதில் உருளைக் கிழங்கு விதைத்தான். அவனுடைய ஆடுகள் பெருகுகின்றன. இரண்டு ஆடுகளும் இரட்டைக் குட்டிகளாக ஈன்றன. இப்போது அவனுக்குச் சொந்தமாக ஏழு ஆடுகள் இருக்கின்றன…… எல்லா வழிகளிலும் அவன் வாழ்வு பிரகாசமாகிக் கொண்டிருக்கிறது.”06
நாவலில் சுரங்கத் தொழில் செய்யும் பாத்திரங்கள் வருகின்றன. அதில் ஈடுபட்ட பலர் நீண்ட -  நிலைத்த பொருளாதாரத்தை எய்த முடியாமல் போகிறார்கள். ஆனால் நிலம் எப்போதும் தன் வளத்தை இழக்காததாக இருந்து வருகின்றது.
“இப்போது செம்புச் சுரங்கம் என்கிற மாசு அந்த
நிலத்தில் இல்லை. அந்தப் பணமும் ஐசவரியமும்கூட”
அவனிடம் தங்கவில்லை. சுரங்க வேலை நின்றவுடனேயே அதனால் பணக்காரர்களாக நினைத்தவர்களெல்லாம் ஏழையாகி விட்டார்கள். ஆனால் ஆல்மென்னிஸ் நிலங்கள் அப்படியே இருந்தன, அழியாமல் இருந்தன, வளமாக இருந்தன, புதிதாகப் பண்ணைகள் பத்து ஏற்பட்டு இருக்கின்றன.
அங்கு என்ன விளையாதிருந்தது? எல்லாம் இருந்தது,
“மனிதர்கள், கால் நடைகள், நிலத்தில் விளையாது எல்லாம் இருந்தது………  மாலை வருகிறது, இருட்டுகிறது”07
என்று நாவல் முடிவடைகின்றது.
இந்த நாவலில் பிரதானமாக நிலம், அதன் வளம், இயற்கை, உழைப்பு என்பவையே முக்கியப்படுத்தப்பட்டுள்ளன. இந்நாவலின் பொருட் சிறப்புக்கு அப்பால் பிறிதொரு சிறப்பு யாதெனில் கதை வைபிள் நடையில், கூடுதலான தகவல்களை உட்கொண்டு, வர்ணணைகள் அதிகம் இல்லாதனவாக ஆனால் வாசிப்பதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளமையென்று கூறலாம்.
2..3 சமூக மாற்றம் - மதகுரு
உலகெங்கனும் குடிபோதை மனித சமூகத்தைச் சிர்குலைத்துக் கொண்டு வருகின்றது. மதகுரு என்னும் இக்கதை இக்கருப் பொருளைத் தாங்கி சமூக மாற்றத்தை நோக்கி எழுதப்பட்டதாக உள்ளது. இந்நாவலில் சொல்லப்பட்டுள்ள இக்கதை எல்லா நாட்டில் உள்ளவர்களுக்குமே பொருந்தக் கூடியது. சுவீடன் தேசத்து நாவலாகிய இதனை ஸெல்மாலாகர்லெவ் எழுதியுள்ளார்.
‘கெஸ்டா பெர்லிங் ஸாகா’ என்னும் இந்நாவலை ‘மதகுரு’ என்று மொழி பெயர்த்தார் க.நா.சுப்பிரமண்யம். அவர் இந்நாவலின் முன்னுரையில்
“கெஸ்டா பெர்லிங்க்கு ஈடான வேறு நூல் உலக இலக்கியத்தில்  மிகவும் சிலவேதான் இருக்கின்றன என்றே கருதுகின்றேன்”08
என்று கூறுவதும் ‘உலகில் சிறந்த நாவல்கள்’ என்னும் தனது நூலில் இவரை இந்நாவலை கெஸ்டாவின் கதை என்று மொழி பெயர்த்து,
“சாதாரணமாக, டாஸ்டாவ்ஸ்கி என்னும் ரு~pய மேதையின் ‘கரமஸாவ் சகோதரர்கள்’ என்னும் நாவலை நாவல் இலக்கியத்தின் ஒரு எல்லைக்கோடு என்று எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள். அதே போல ஸெல்மா லாகர்லெவின் கெஸ்டாவின் கதை என்னும் நாவலை நாவல் இலக்கியத்தின் ஒரு எல்லைக்கோடு என்பதை அதைப் படிப்பவர்கள் எல்லோருமே ஒப்புக் கொள்ளத்தான் செய்வார்கள்”09
என்று கூறுவது இந்நாவலின் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றதெனலாம்.
ஓரு மத குரு ஆரம்பத்தில் குடிகாரனாக இருந்து பின்னர் அதிலிருந்து திருந்தியவனாக வாழத் தொடங்குவதை இந்நாவல் பிரதான கதையாகக் கொண்டுள்ளது. கெஸ்டா பெர்லிங் என்னும் மதகுரு தெய்வ உள்ளம் படைத்தவனாக இருந்தாலும் தனது கடமைகளைச் சரியாகச் செய்தவனாக, அளவுக்கு மீறிக் குடித்துவிட்டு (ஆலயத்தில் பிரார்த்தனை, பிரசங்கங்கள் செய்ய வேண்டிய நாட்களிலும் கூட) நடத்தை கெட்டுத் திரிகின்றான். பிறரது பொருட்களை (மாவையும், வண்டியையும்) விற்றுக் குடித்துவிட்டு பின்பு பிராயச் சித்தமாக இறந்துவிட நினைக்கிறான். பின்னர் உல்லாஸப் புரு~ர்கள் குழுவில் இணைந்து செயற்படுகின்றான். திருமணக் கடத்தல்களில் ஈடுபடுகின்றான், மேரியான் ஸிங்க்ளேர், அன்னா ஸ்டார்ண்யாக் என்னும் இரு பெண்கள் அவனைக் காதலித்தனர். எனினும் அவன் எலிஸபெத் டோனா என்பவளைத் திருமணம் செய்து கொள்கிறான்.
ஆரம்பத்தில் லாயக்கற்றவன் குடிகாரன் என்று பலவாறு தூற்றி அடித்து விரட்டப்பட்ட கெஸ்டா என்னும் மதகுரு பின்னர் உலகம் போற்றும் உத்தமனானான். சொத்துச் சுதந்திரங்களில் ஆசையற்றவனாகி கடைசியில் கெஸ்டா எலிஸபெத்துடன் காட்டு ஓரத்தில் தன்னை அண்டி வந்தவர்களுக்கெல்லாம் பல உதவிகள் செய்தான். தச்சு வேலை செய்து சம்பாதித்து வாழ்வை நடத்தினான். நோயாளிகளுக்கு சிகிச்சை செய்தான், சமூகத்துக்குபு; பணி செய்தான். கெஸ்டாவையும் எலிஸபெத்தையும் எல்லோரும் புகழ்ந்து போற்றினார்கள். காவியத்தில் வரும் அற்புதமான மனிதர்கள் போல் கெஸ்டாவும் ஒருவர் என்று கூறுவதுகூட தவறாக இருக்காது.
அற்புதங்களையும், அதிசயங்களையும் மிகவும் லேசாக நம்பும்படியாக சொல்லி இருக்கின்றார் ஆசிரியர் என்பது மட்டுமல்ல ஒரு காவிய நயத்துடன் சொல்லியிருக்கிறார் எனலாம். க.நா.சுப்ரமணியம் இந்நாவலின் முன்னுரையில் பின்வருமாறு கூறும் கருத்து இந்நாவலின் சிறப்பைத் தெளிவு படுத்துவதாக அமையும்.
“கதை சொல்வதில் செல்மா லாகர்லெவின் பாணி அலாதியானது.  கலையை மணக்கும் ஒரு கலையுடன், எளிய உதாரணங்களுடன்,  கவித்துவம் நிறைந்த வார்த்தைகளைக் கொட்டி, ஒரு சம்பவத்தை  உருவகப் படுத்துகிறாள். இந்த மாதிரிக் கதை எழுதியவர்கள், காவியம் எழுதிய கவிதைகளைத் தவிர வேறுயாருமில்லை என்று தைரியமாகக் கூறலாம்.”10
ஒரு நல்ல கதையும் சிறந்த உத்தியும் கொண்ட நாவல் உலகத்திற்கு உயர்த்திப் பேசப்படும் என்பதற்கு மதகுரு என்னும் நாவல் சிறந்த எடுத்துக் காட்டு. ஆக, ஸ்காண்டிநேவிய நாடுகளின் நாவல்களில் இந்நாவல் ஒரு தனித்தரமும் முக்கியத்துவமும் உடையது என்பதில் சந்தேகமில்லை.
2.4 மனித மனதில் தோன்றும் உணர்வுகள் பற்றிய விபரிப்பு:- குள்ளன்
உலகப் புகழ்பெற்ற நவீனங்களில் ஒன்றாகிய குள்ளன் என்னும் நவீனம் கதையமைப்பாலும் கதையம்சத்தாலும் விசித்திரமானதொன்றாக உள்ளது. ஸ்காண்டிநேவிய நாடான சுவீடனைச் சேர்ந்த பர்லாகர் க்விஸ்ட் என்பவரே இதன் ஆசிரியர்.
இயற்கையினால் வஞ்சிக்கப்பட்டுப் பிறக்கின்ற குள்ளர்களிலிருந்து வித்தியாசப்பட்ட, ஒரு குள்ளனது கதை இது. குள்ளர்கள் பற்றிய சமூகக் கருத்துருவாக்கத்தைக் கேள்விக் குள்ளாக்கி அறிதிறனாலும், புலமையினாலும் உயர்ந்த ஒரு குள்ளனே கதையை நடத்திச் செல்கின்றான். மனிதனுடைய மனதில் நன்மைக்கும் தீமைக்கும், லட்சியத்துக்கும், நடைமுறைக்கும் ஏற்படும் போராட்டத்தை மிகவும் சிறப்பாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர். இவ்வாசிரியருக்கு 1951ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
நாவலில் வரும் குள்ளன் தன்னை அறிமுகப்படுத்தும் விதம் சிறப்பானது. சிறப்புகருதி அப்பகுதியில் ஒரு சிறு பகுதி இங்கே தரப்படுகின்றது.
“இரண்டடி இரண்டு அங்குல உயரம்தான் நான். நல்ல அமைப்பும் சீரும் கொண்ட உடல், தலை மட்டும் சற்று பெரிது, மற்றவர்களைப்போல என் தலைமயிர் கறுப்பு அல்ல. சற்றுறச் செந்நிறம், கட்டையாக விறைப்பாக  இருக்கும். நெற்றியிலிருந்து பின்னால் இழுத்து வாரியிருப்பேன். நெற்றி  அகலம்தான் ஆனால் உயரம் அல்ல. முகத்தில் தாடி கிடையாது மற்றப்படி எல்லா மனிதர்களையும் போலத்தான் புருவங்கள் இரண்டும் கூடுகின்றன. தேக பலம் அசாத்தியம். அதுவும் யாராவது என் வழிக்கு வந்து விட்டால் அந்தப் பலம் வளர்ந்து விடும்....... ஆஸ்தானத்தில் குள்ளன் நான் ஒருவன் தான்”11
கோமாளித் தன்மையுயடைய குள்ளர்கள் போல் இல்லாத இந்தக் குள்ளன் அரச சபையில் அரசனுக்கு மது ஊற்றிக் கொடுக்கவும் இளவரசியின் காதலனுக்குரிய தூதுவனாகவும் இருக்கிறான். இக்குள்ளர்களிடமே இளவரசி காதல் கடிதங்களை அனுப்புகிறாள். இதனை பின்வரும் பகுதி எடுத்துக் காட்டும்.
“ தன் அறைக்கு என்னை அழைத்து நான் சொல்ல வேண்டிய செய்திகளை என் காதோடு காதாகச் சொல்லுவாள் அவள். என்னுடைய சட்டைப் பைக்குள் காதல் கடிதங்களை மறைத்து வைப்பாள்”12
ஆனால் இக்குள்ளன் இளவரசியின் காதலர்களை வெறுக்கின்றான். இதனை,
“அவர்களுடைய காதலர்கள் எல்லோரையும் நான் வெறுக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவர் மீதும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து என் கத்தியால் கிழித்து ரத்தம் பெருகப் பார்க்க வேண்டுமென்பது என் ஆசை”13
என்னும் பகுதி எடுத்துக் கூறுகின்றது.
குள்ளர்களுக்கு எதுவும் தெரியாது அவர்கள் மது ஊற்றிக் கொடுக்கவும் கோமாளித் தன்மைக்குமே ஏற்றவர்கள் என்றே அரசனும் அரசியும் நினைத்து இக்குள்ளனையும் நடத்துகின்றனர். ஆனால் இவன் எல்லா ரகசியங்களையும் அறியும் திறன் கொண்டவனாக உள்ளான். கடைசியில் இந்தப் பிரத்தியேகமான அறி திறன் அவனது ஆற்றலுக்கும் அறிவுக்கும் வீழ்ச்சியாக இருந்து விடுகிறது. இளவரசி இறந்ததற்கு குள்ளனே காரணம் என்று விலங்கிடப்படுகிறான் கடைசியில்,
“விலங்கில் கட்டுண்டு உட்கார்ந்திருக்கிறேன் நான், நாட்கள் ஓடுகின்றன ஒரு சம்பவமும் நேரவில்லை மகிழ்ச்சியில்லாத வெறும் சூன்ய வாழ்க்கை ஆனால் குறை சொல்லாமல் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன் …….. என் விலங்கைத் தளர்த்து என்னை விடுவிக்கும் நாளைப் பற்றி நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன.; இளவரசர் எனக்குச் சொல்லி அனுப்பி விட்டால் இந்த விலங்கு தளர்ந்து தாகே ஆக வேண்டும்.”14
இக்கதையில் வரும் குள்ளனுக்கு மற்றவர்களின் சிரிப்பு, சந்தோசம், காதல், கெட்ட நடத்தை, விபச்சாரம் எதுவும் பிடிக்காது. தன்னைப் போன்ற ஆனால் கோமாளிகளாக இருக்கும் குள்ளர்களையும் அவனுக்குப் பிடிக்காது. தான் குள்ளனாக இருப்பதைப் பற்றியும் அவனுக்குக் கவலையில்லை. தான் உயர்ந்தவன், பலம் மிக்கவன் என்னும் நினைப்பு அவனுக்கு உண்டு. ஆக மனித மனத்தின் உணர்வு நிலையை அதன் பாய்ச்சலை மிகவும் விசித்திரமாகச் சொல்வதன் மூலம் உலக நாவல் இலக்கிய வரிசையில் ஸ்காண்டிநேவிய நாவலான “குள்ளன்” தனித்துவமான இடத்தைப் பெற்றுவிட்டதென்பதுதான் உண்மை.
3. தொகுப்பும் முடிவும்
ஸ்காண்டிநேவிய நாவல்களுள் பிரதான இடத்தைப் பெற்றுள்ள பசி, நிலவளம், மதகுரு, குள்ளன் ஆகிய நான்கு நாவல்கள் பற்றி இங்கு நோக்கப்பட்டுள்ளன. இவ்வரிசையில் நோக்கத்தக்க மேலும் பல நாவல்களும் உள்ளன. வாசிக்கக் கிடைக்கவில்லையாகையால் இவை பற்றி இங்கு நோக்க முடியவில்லை.
பசி நாவல், ஒரு மனிதனை, அவனது உள்ளம், செயல் என்பவற்றை எவ்வாறு கட்டுப் படுத்துகிறது, அது அவனை எவ்வாறு வாட்டுகிறது என்பதை; எடுத்துரைக்கிறது. மண்ணின் வளத்தை அதுசார்ந்த வாழ்க்கை முறையை நிலவளம் எடுத்துக் கூறுகின்றது. ஆரம்பத்தில் குடிகாரனாக இருந்து பின்னர் சமூகம் மதிக்கும் சிறந்த காவிய நாயகனாக மாறும் ஒரு மனிதனை (மதகுருவை) “மதகுரு” என்னும் நாவல் மனக்கண்முன் நிறுத்துகின்றது. மிகவும் வித்தியாசமாகப் படைப்பட்டுள்ள “குள்ளன்” நாவல் மனித மனத்தில் தோன்றும் உணர்வு நிலையை அதன் இயங்கு நிலையை அப்பட்டமாகச் சொல்லி நிற்கிறது. ஆக இந்நாவல்கள் அனைத்தும் எல்லோருக்குமான பொதுவான மன உணர்வுகளைப் பிரதிபலித்து நிற்பதனைக் காணலாம். இத்யாதியான பண்புகளை ஸ்காண்டிநேவிய நாவல்கள் கொண்டுள்ளதன் மூலம் அவை உலக இலக்கியத்தில் சிறப்பான இடத்தில் வைத்து நோக்கப்படுகின்றன எனலாம்.
எனவே “ஸ்காண்டிநேவிய இலக்கியத்தில், ஸ்வீடிஷ், நார்வே பாஷை இலக்கியங்கள் வெகுவாக வளர்ந்து, இன்றுள்ள எந்த இலக்கியத்துக்கும் ஈடு சொல்லக்கூடிய அளவில் வளர்ந்திருக்கின்றன. ஒரு நூற்றாண்டிற்குள் ஏற்பட்ட இந்த வளர்ச்சி பிரமாதமானது.”15; என்று க.நா.சுப்பிரமண்யம் தான் மொழி பெயர்த்த ‘மதகுரு’ நாவலின் முன்னுரையில் கூறுவது போல ஸ்காண்டிநேவிய நாவல்கள் ஒரு உன்னதமான இடத்தில் இருக்கின்றன. இது பற்றிய ஆய்வு தமிழில் விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் தேவை உள்ளது.

அடிக்குறிப்புக்கள்
1. நட்ஹாம்சன்(தமிழில் சுப்ரமணியம்.க.நா), பசி, சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், 1987,பக்.4
2. மேலது, பக்;. 5
3. மேலது, பக்;. 5
4. மேலது, பக்;. 200
5. நட்ஹாம்சன்(தமிழில் சுப்ரமணியம்.க.நா), நிலவளம், மருதா, டிசம்பர் 2003( இரண்டாம் பதிப்பு),பக்.11
6. மேலது, பக்;. 14                 7. மேலது, பக்;. 364-365
8. செல்மா லாகர் லெவ்( தமிழில் சுப்ரமணியம்.க.நா.) மதகுரு, கவிதா பப்ளிகேஷன்ஸ், நவ2001.பக். எi
9. சுப்ரமணியம்.க.நா, உலகின் சிறந்த நாவல்கள், மணிவாசகர் பதிப்பகம், 1990(முதற்பதிப்பு),பக்.9
10. செல்மா லாகர் லெவ்( தமிழில் சுப்ரமணியம்.க.நா.) மதகுரு, கவிதா பப்ளிகேஷன்ஸ், நவ2001.பக்.எii
11.பர்லாகர்க்விஸ்ட்(தமிழ்ஜானகிராமன்.தி), குள்ளன், சமுதாயம்பப்ளிகேஷன்ஸ்,அக்டோபர்1986(முதற்பதிப்பு),பக்.5
12. மேலது, பக்;. 9      13. மேலது, பக்;. 9
14. மேலது, பக்;. 212
15. செல்மா லாகர் லெவ்( தமிழில் சுப்ரமணியம்.க.நா.) மதகுரு, கவிதா பப்ளிகேஷன்ஸ், நவ2001.பக். எiii

மூல நூல்கள்
1. நட்ஹாம்சன்(தமிழில் சுப்ரமணியம்.க.நா), பசி, சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், 1987
2. நட்ஹாம்சன்(தமிழில் சுப்ரமணியம்.க.நா), நிலவளம், மருதா, டிசம்பர் 2003( இரண்டாம் பதிப்பு)
3. செல்மா லாகர் லெவ்( தமிழில் சுப்ரமணியம்.க.நா.) மதகுரு, கவிதா பப்ளிகேஷன்ஸ், நவ. 2001.
4. பர்லாகர் க்விஸ்ட்(தமிழ் ஜானகிராமன்.தி),குள்ளன், சமுதாயம்பப்ளிகேஷன்ஸ்,அக்டோபர்1986(முதற்பதிப்பு)

பயிரை மேய்ந்த வேலிகள்




மண் மறக்காத் துயரமாய்
அழிந்து கருகிப் போன
பயிர்களுக்கு
மரணச் சாட்சிகள்
எதுவுமில்லை.

அவைகளின் தொகைகளும்
சரியாய்த் தெரியாது.

பாவம்
வேலி பயிரைக் காக்குமென்று
நம்பி
ஒலிவ் மரத்தைச் சுற்றி
ஓங்கி வளர்ந்து நின்ற
பயிர்கள் அவை

காவலுக்கு நின்ற வேலி
கரைதாண்டும்
கலிகாலக் கடல்போல
பலிகொண்டு போனதால்
மண் மறக்காத் துயரமாய்
அழிந்து கருகிப் போன
பயிர்களுக்கு
மரணச் சாட்சிகள்
எதுவுமில்லை.

ஊர்க்குருவி




ஊர்க்குடிசை தோறும்
ஊர்க்குருவி கூடுகட்டி வாழும்
உலகத்தவர்க்கெல்லாம் - அது
உயர்ந்ததென்று தோன்றும்.

எமக்கும் குடிசை வீடு
அதற்குள்
அதற்கும் ஒரு கூடு
நோக்கும்போது எல்லாம்
பார்க்கும் கண்களை உருட்டி.

சோம்பலின்றி வாழும்
சோகம் இன்றிப் பாடும்
சொந்த முயற்சியில் கூட்டை
சேர்ந்து கட்டியெடுக்கும்

கூடி என்றும் திரியும்
குடும்பமாக வாழும் - சிலர்
கூடு கலைத்து விட்டால்
குடும்பத்தோடு குழறும்.

எனினும்
வாழவென்றே நினைக்கும்
வானமெங்கும் பறக்கும்
தேடி ஒரு கூட்டை
மீண்டும் கட்டி எடுக்கும்.

வண்ணமுட்டை இட்டு
வடிவாய் அடை காக்கும்
உடைந்து ஒன்று போயினும்
உயிர் வலிக்கத் துடிக்கும்

கொஞ்சிக் குலாவி வாழும்
குஞ்சும் பொரித்து மகிழும்
ஓன்று மாறி ஒன்று அதற்கு
கொண்டு கொடுக்கும் உணவு.

முயற்சியோடு வாழ்வதால்
பசித்து அவை கிடப்பதில்லை
பாம்பு பருந்து என்றால்
பயந்து நடுங்கி பறந்துவிடும்.

பட்டுப்போர்த்த மேனி அதைத்
தொட்டுப் பார்க்கச் சொல்லும்
எட்டுப் போட்டு நடந்தால்
அழகை மனதில்
விட்டுப் போட்டுப் பறக்கும்.

கள்ளம் இன்றி வாழ்வதால்
தொல்லை நேர்ந்ததில்லை
அதன்
உள்ளம் பார்க்கவிரும்பினால்
ஊரில் வந்து பார்க்கலாம்.
-.மேரா-