Wednesday, November 23, 2011

கொக்கட்டிச்சோலைத் திருத்தாந்தோன்றீச்சர பரிபாலன சபையின் அனுசரணையுடன் பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம்,க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்காக நடாத்தும் பரீட்சைக்கு உதவு கருத்தரங்கு – 2011

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, மூன்று மணித்தியாலம்
தமிழ் மொழியும் இலக்கியமும்-1,11
தமிழ் மொழியும் இலக்கியமும்-1
(i) எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக. வினாத்தாள் 1 இற்குரிய புள்ளிகள்40 ஆகும்.
(ii) 1 தொடக்கம் 40 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றிலும் (1),(2),(3),(4) என எண்ணிடப்பட்ட விடைகளில் சரியான அல்லது மிகப்பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
(iii) உமக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் ஒவ்வொரு வினாவுக்கும் உரிய வட்டங்களில் உமது விடையின் எண்ணை ஒத்த வட்டத்தினுள்ளே புள்ளடியை(ஒ) இடுக.
(iஎ) அவ்விடைத்தாளின் பிற் பக்கத்தில் தரப்பட்டுள்ள மற்றைய அறிவுறுத்தல்களையும் கவனமாக வாசித்து அவற்றைப்பின்பற்றுக.
• பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றிலும் தடித்த எழுத்திற் காணப்படும் சொல் பற்றிய வினாவுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.

1. நச்சப்படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம் பழுத்தற்று| இச்செய்யுளில் நச்சப் படாதவன் என்பதன் கருத்து யாது?
1.விரும்பப்படாதவன் 2.ஆசை கொண்டவன் 3.பொறாமை கொள்ளாதவன் 4.கோபப்படாதவன்
2); வேழத்திற் பட்டுருவுங்கோல் பஞ்சிற் பாயாது.| - வேழம்; என்பதன் ஒத்தகருத்து யாது?
1. குதிரை 2. மலை 3. வேங்கை 4. யானை
3) ஷமருள் தீர்ந்த மாசு அறு காட்சியவர்| இங்கு மருள் என்பதன் ஒத்தகருத்துச் சொல் யாது?
1. காரிருள் 2. மயக்கம் 3. தெளிவு 4. பொருள்
4) வீட்டின் தெருவோரக் கொட்டகையில் ஓர் உருவம் குந்தியிருந்தது. குந்தியிருந்தது என்பதன் எதிர்கருத்துச் சொல்.
1. அமர்ந்திருந்தது 2.படுத்திருந்தது 3.எழுந்துநின்றது 4.உட்காந்திருந்தது
5) நடுவு நிலைமையைப் போற்றுவதே நீதிபதியின் தலைமைப்பண்பு. நடுவு நிலைமை என்பதன் எதிர்கருத்துச் சொல்
1. பாராட்டு 2.வீழ்ச்சி 3.பட்சபாதம் 4.ஒத்திப்போடுதல்

• பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க
6) பாதுகாக்குமாறு ஒருவரை மற்றொருவரிடம் சேர்த்தல்,
1. ஒப்புவித்தல் 2.ஓம்படை 3.ஒப்படைத்தல் 4.ஒப்புக்கொடுத்தல்
7) இலங்கை அரசு தனது பாதீட்டில் பெரும் நிதியை யுத்தச் செலவீனங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது..- பாதீடு என்பது
1. பதிலீடு 2.வரவு செலவுத்திட்டம் 3.முதலீடு 4.பதிவேடு
8) ஒவ்வொரு நொடிப்பொழுதும் உயிரைப் பணயம் வைத்துத்தான் நாம் வாழவேண்டியிருக்கின்றது. பணயம் என்பதன் பொருள்.
1. ஈடாக வைத்தபொருள் 2. பந்தயப் பொருள்
3. திரும்பப் பெறமுடியாத பொருள் 4. முன்வைத்திடும் பொருள்
9) கடலில் கப்பல் செலுத்துபவன்;.
1. வலவன் 2. பாகன் 3. இயக்குநன் 4. மீகாமன்
10) இளைத்த காலத்தில் உதவுவதற்காகச் சேமித்து வைக்கப்படும் சேமப்பொருள்
1. ஓய்வ+தியம் 2.சேமிப்புப்பணம் 3.ஏகபோகம் 4.எய்ப்பில் வைப்பு

11) அரசுக்கு மக்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கொடுக்கும் பொருள்
1. கட்டணம் 2.தீர்வை 3.சுங்கம் 4.அரசிறை
12) எவரும் அறியாத வகையிற் பிறநாட்டு இரகசியச் செய்திகளை அறிவோர்
1. தூதுவர் 2.ஒற்றர் 3.அமைச்சர் 4.அதிகாரிகள்
13) அநுபவத்தோடு இணையாத கல்வி அறிவு
1. பட்டறிவு 2.ஒத்திகை 3.ஏட்டுச் சுரைக்காய் 4.கண்கழுவுதல்
14) போர்க்களத்தில் படை அணிவகுப்பில் முதல் வரிசையில் நிற்பது;;;,
1. காலாட்படை 2.தேர்ப்படை 3.யானைப்படை 4.தூசிப்படை
15) வாழ்த்தினும் வையினும் அவ்வப் பயனைத் தரும் சொல்,
1. பொன்மொழி 2.வசைமொழி 3.நிறைமொழி 4.பழிமொழி
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க
16) கமலன் ஓட்டைக் கையனாய் வாழ்ந்தான். ஓட்டைக்கை என்னும் மரபுத் தொடரின் பொருள்
1. பணக்காரன் 2. உலோபி 3. கொடையாளி 4. செலவாளி
17) கண்ணன் கண்டபடி கடன் கொடுத்தமையினால் வியாபாரம் கையைக் கடித்தது .- கையைக் கடித்தல் என்னும் மரபுத் தொடரின் பொருள்.
1. கைசோர்தல் 2. பொருள் நட்டமடைதல் 2. விருத்தி பெறல் 4. கையிற் கிடைத்தல்
18) நன்மாணாக்கன் ஆசிரியர் சொல்லைத் தலைமேற் கொண்டு ஒழுகினான். தலைமேற் கொள்ளுதல் என்னும் மரபுத்தொடரின் பொருள்
1. கவனமாகக் கேட்டல் 2. பக்தி சிரத்தையோடு பின்பற்றல்
3. அறிவுரையாய் ஏற்றம் 4. மூளையிற் கொள்ளல்
19) விகடகவி பொடி வைத்துப் பேசுவதிலே சமர்ததன். இங்கு பொடி வைத்துப் பேசுதல் என்ற மரபுத் தொடா.;
1. தந்திரமாகப் பேசுதல் 2. நகைச் சுவையாகப் பேசுதல்
3. நறுக்காகப் பேசுதல் 4. சுற்றி வளைத்துப் பேசுதல்
20) நெருப்பெடுத்தல் என்னும் மரபுத்தொடரின் பொருள்
1. கருப்ப+ரச் சட்டி எடுத்தல் 2. நெருப்பு மூட்டுதல்
3. வெறுப்ப மிக உண்டாதல் 4. கடுமையாகக் கண்டித்தல்
21) வருகின்றனன் - இதில் வந்துள்ள ஆண்பால் விகுதி,
1. கின்று 2. அன் 3. வரு 4. ஆன்
22) செய்பவன், செயல், காலம் ஆகியன வெளிப்படத் தோன்றி முற்றுப்பெற்று நிற்கும் சொல்,
1. பெயரெச்சம் 2. தெரிநிலை வினைமுற்று 3. பெயர்ச்சொல் 4. குறிப்பு வினைமுற்று
23) பின்வருவனவற்றுள் காலங்காட்டும் தொழிற் பெயராகவும் தெரிநிலை வினைமுற்றாகவும் வரத்தக்கசொல்,
1. பாய்ந்தான் 2. பாய்ந்தனர் 3. பாய்ந்தன 4. பாய்ந்தது.
24) “பிச்சை புகினும் கற்கை நன்றே” இதில் உம் இடைச்சொல் தந்த பொருள்,
1. எதிர்மறை 2. முற்று 3. எச்சம் 4. எண்
25) பெயர், வினைச்சொற்களைச் சார்ந்து அவற்றின் பண்புகளை உணர்த்துவதற்கென்றே அமைந்தவை,
1. உருபுகள் 2. இடைச்சொற்கள் 3. உரிச்சொற்கள் 4. சுhரியை
26) பெண்பால் விகுதி கொண்ட சொல்
1. வந்தனர் 2. வந்தது 3. வருகிறாள் 4. வந்தார்
27) பலவின்பால் விகுதி கொண்ட சொல்
1. போயிற்று 2. நடந்தன 3. வந்தார் 4. வந்தனர்

28) சென்றேன் என்பதில் வந்துள்ள இறந்த கால இடைநிலை
1. ஏன் 2. செல் 3. ன் 4. ற்
29) நன்றி மறப்பது நன்றன்று. இதன் பயனிலை
1. நன்றி 2. நன்றன்று 3. அன்று 4.மறப்பது
30) யான் என்பது நான்காம் வேற்றுமை உருபு ஏற்றால்
1. நமக்கு 2. நானை 3. யானை 4. எனக்கு
பின்வரும் பந்திகளின் பிரதான கருத்தைத் தெரிவு செய்க
31) ஆசைப்படாதவர்கள் மனிதர்களில்லை.அதற்காக எல்லாவற்றுக்கும் ஆசைப்படவும் கூடாது. அளவு கடந்தும் ஆசை கொள்ளக் கூடாது.
1. ஆசைப்படக் கூடியவற்றில் அளவோடு ஆசை வைத்துக் கொள்ளுதல் நல்லது. 2. ஆசை மோசமானது. 3.. மனிதர்கள் ஆசைப்படக் கூடியவர்கள். 4. எல்லாவற்றிலும் ஆசை வைத்துக் கொள்ளுதல் நல்லதல்ல
32) ஒருவரோடு ஒருவர் உறவு கொள்ளுவது இயல்பானது. எதிர்பார்ப்போடு உறவு கொள்வோர் தம் எதிர்பார்ப்பு நிறைவேறாவிடில் மன உழைச்சலுடன் வெளியேறி விடுவர். அவ்வாறு அன்றி உறவு கொள்வோர் இன்பத்திலும் துன்பத்திலும் நெடுங்காலம் இணைந்திருப்பர்.
(1) இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுப்பதே நல்ல உறவு.
(2) ஒருவரோடு ஒருவர் உறவு கொள்ளுவது இயல்பானது.
(3) துன்பமும் இன்பமும் உறவுக்குத் தடையாக உள்ளது.
(4) உறவு மன உழைச்சலை ஏற்படுத்தும்.
பின்வரும் வினாக்களிலுள்ள வாக்கியத்தின் முற்பகுதிக்குப் பொருத்தமான முடிக்கும் பகுதியைத் தெரிக

33) அங்கே நிற்கும் குழந்தைகள்,
1. அவர்களுடையதல்ல. 2. அவர்களுடையவரல்லர். 3. அவர்களுடையதன்று. 4.அவர்களுடையனவல்ல.
34) நீர் கூப்பிட்டிராவிட்டால் அவர்;,
1. போய்விட்டிருந்தார். 2. போய்விட்டிருப்பார். 3. போய்க்கொண்டிருக்கிறார் 4.. போய்விட்டார்.
35) ஆயிரம் தாரகைகள் சேர்ந்தாலும்,
1. ஒரு சந்திரனுக்கு நிகராகுமா? 2. ஒரு சந்திரனை ஒப்பனவா?
3. ஒரு சந்திரனை நிகராகாது 4. ஒரு சந்திரனை ஓக்கும்
பின்வருவனவற்றுள் சரியாக எழுத்துக் கூட்டப்பட்ட சொல்வரிசையைத் தெரிவு செய்க.
36) 1.அரசியல், உலகியல், தொல்லியல், நல்லியல் 2. சந்தை, மலக்கறி, நாளங்காடி, சம்பளம்.
3. தினைக்களம், கல்விற்கந்தோர், உளவியல், மாக்சிஸம் 4 புடைவை, அகழ்வாராட்சி, பூந்த்தோப்பு
பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றிலும் புள்ளிக் கோடிட்ட இடத்தை நிரப்புவதற்கு மிகப்பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க.
37) கிளி தன்........... மாம்பழத்தைக் கோதியது.
1. அளகினால் 2.அலகினால் 3.அழகினால் 4.அலகிணால்

38) ................ கண்ணீர் விடுவது போன்று மழைத்துளி விட்டுவிட்டு விழுந்தது.
1. வாணம் 2.வாநம் 3.வானம் 4.வாநனம்
39) அளகவல்லி பிடித்துவந்த ........... பயத்தால் நடுங்கியது.
1. ஆண்மயில் 2.அளகம் 3. அளகு 4.அழகு
கீழே சில வாக்கியங்கள் ஒழுங்கின்றிக் காணப்படுகின்றன.அவ்றை ஒழுங்குபெற வைத்தால் கட்டுக்கோப்பான பந்தியொன்று அமையும். அவ்வாறு பந்தியை அமைப்பதற்கு மிகப் பொருத்தமான வைப்பு முறையைத் தெரிவு செய்க.
40) (அ) அக்குணங்களை ஆள்பவர் ஆண்மையுடையோர்.
(ஆ) சான்றாண்மை உள்ளவரே சான்றோர்.
(இ) அக்குணங்களில் எதுவும் தன்னைவிட்டுப் பிரிந்து போய்விடாமல் அடக்கி ஆண்டு வாழுபவர் சான்றாண்மை உடையோர்.
(ஈ) ஒழுக்கத்தை உயிரிலும் பெரிதாகக் கருதுவது நற்குணங்களில் ஒன்று.
(உ) நற்குணங்கள் பலவற்றைப் படைத்தோர் நல்லோர்.
1. இ,ஆ,அ,உ,ஈ 2. உ,அ,ஈ,ஆ,இ 3. இ,அ,ஈ,உ,ஆ 4. இ,உ,ஆ,ஈ,அ

No comments:

Post a Comment