Monday, January 6, 2014

மனவெளியில் திடீர் அகால மரணம்

மனவெளியில் திடீர் அகால மரணம்….. உரையாலில் பயன்படுத்தக் கூடாத அந்தவோர் வார்த்தையை நீ நிச்சயம் தின்றிருக்கவேண்டும். கக்கியிருக்கக் கூடாது. நான் உன்னையும் நீ என்னையும் நேசித்தது நிலவை உண்ண விரும்பிய குழந்தையின் நினைவுபோலாகிவிட்டது. நினைவுகள் தொடர்ந்த நம் காலத்தை இரு சமாந்தரங்களாக இருந்து கனவு காண்போம். அப்போது அமரத்துவமடையாத ஆத்மாவைப்போலவே நினைவுகளும் என்ற குறிப்பை வெளியெங்கிலும் எழுதி எழுதி பகிர்வோம்.

மாறிய காலத்தில்…….

மாறிய காலத்தில்…….

தயங்காதே புறப்படு
நினைவைச் சாகடி
நிறைய நடி
நாயகன் என்று நம்பவை

மரபைச் சிதை
மறுபடியும் மறுபடியும் பொய் சொல்
உன்னால் உன்னை அவமானப்படுத்து
பின்னால் பாய்ந்து அன்பரைக் கொல்

ஏன் இன்னும் தாமதிக்கிறாய்
வேட்கத்தை மறு
வேலி தாண்டிப் புணரு.
உயிர் வலியன்பைப் பொசுக்கிவிடு
கண்ணால் ஒழுகும் மோகத்தைப் பருகு.
இதயத்தில் பலமாக இடி
மொத்தமாகச் சாகடி
முத்தத்தால் முகங்கழுவு.
உணர்வற்ற உடலில் விரும்பியபடி கிட
பின்
தெருவில் தூக்கியெறி; பிணமாக.

கடவாயை அகல விரி
நாக்கை நீட்டு
முளைக்கும் வேட்டைப்பல்லால் மனிதத்தைப் பழிவாங்கு
நான்னு கால்களுடன் புறப்படு
குறி திமிர்த்து ஒழுகட்டும் வீதியெங்கும்.

குரங்காய் மாறு
மரங்களில் ஏறு
குலைமாறிக் காய்க்கட்டும் தென்னைகள்
கேவலம் கண்டு குழந்தைகள் கருத்தரிக்க மறுக்கட்டும்

நாய் பூனை இவையெல்லாம்
ஒவ்வொரு விட்டிலும் அவமானத்தால் தற்கொலை செய்யட்டும்.


-    மேரா   -