Monday, January 6, 2014

மனவெளியில் திடீர் அகால மரணம்

மனவெளியில் திடீர் அகால மரணம்….. உரையாலில் பயன்படுத்தக் கூடாத அந்தவோர் வார்த்தையை நீ நிச்சயம் தின்றிருக்கவேண்டும். கக்கியிருக்கக் கூடாது. நான் உன்னையும் நீ என்னையும் நேசித்தது நிலவை உண்ண விரும்பிய குழந்தையின் நினைவுபோலாகிவிட்டது. நினைவுகள் தொடர்ந்த நம் காலத்தை இரு சமாந்தரங்களாக இருந்து கனவு காண்போம். அப்போது அமரத்துவமடையாத ஆத்மாவைப்போலவே நினைவுகளும் என்ற குறிப்பை வெளியெங்கிலும் எழுதி எழுதி பகிர்வோம்.

மாறிய காலத்தில்…….

மாறிய காலத்தில்…….

தயங்காதே புறப்படு
நினைவைச் சாகடி
நிறைய நடி
நாயகன் என்று நம்பவை

மரபைச் சிதை
மறுபடியும் மறுபடியும் பொய் சொல்
உன்னால் உன்னை அவமானப்படுத்து
பின்னால் பாய்ந்து அன்பரைக் கொல்

ஏன் இன்னும் தாமதிக்கிறாய்
வேட்கத்தை மறு
வேலி தாண்டிப் புணரு.
உயிர் வலியன்பைப் பொசுக்கிவிடு
கண்ணால் ஒழுகும் மோகத்தைப் பருகு.
இதயத்தில் பலமாக இடி
மொத்தமாகச் சாகடி
முத்தத்தால் முகங்கழுவு.
உணர்வற்ற உடலில் விரும்பியபடி கிட
பின்
தெருவில் தூக்கியெறி; பிணமாக.

கடவாயை அகல விரி
நாக்கை நீட்டு
முளைக்கும் வேட்டைப்பல்லால் மனிதத்தைப் பழிவாங்கு
நான்னு கால்களுடன் புறப்படு
குறி திமிர்த்து ஒழுகட்டும் வீதியெங்கும்.

குரங்காய் மாறு
மரங்களில் ஏறு
குலைமாறிக் காய்க்கட்டும் தென்னைகள்
கேவலம் கண்டு குழந்தைகள் கருத்தரிக்க மறுக்கட்டும்

நாய் பூனை இவையெல்லாம்
ஒவ்வொரு விட்டிலும் அவமானத்தால் தற்கொலை செய்யட்டும்.


-    மேரா   -

Thursday, May 23, 2013

துயரில் வேகுதல்


ஆக்காட்டி நான் அழுத துயர் கேட்டீர்,
பூக்காட்டோரத்தில் 
தாயதி பூமியை காடழித்து 
வாழ்பதியமைத்து
வாழ்ந்துவந்தபரம்பரை  நான்.

புண்ணியனார் கரம் பற்றி 

நான் பெற்றபிள்ள  நான்கு.
சின்னவயதிலொன்று குளிரெழும்பி இறந்துபோக
வளர்ந்தது மூன்று.

;துப்பாக்கி தின்று

என்மன்னர் இறந்துபோக 
பிள்ளைகளை
வளர்க்க நான் பட்டபாடு  
நானறியேன் வேறுயாரு என்போல..

போர்ப்பறையெழ புறப்பட்ட என்மகன் வேங்கையாம்.

நானறியேன் அவன்சேதி
கடதாசி வந்தது காவியமாம்; என்று

நடுத்தவள், அடுத்தவன் எல்லாரும் அதே வழிபோக

தனியானேன் நானே பாவியானேன்.

சங்கப்போரில் மார்பறுத்தெறியத் துணிந்த 

மங்கை வழி  நல்லாள் முகம் காண எனக்கு ஏக்கம்.
மங்கையர் திலகமென வாழ்த்தியோர் இங்கில்லை.
வானம் பொந்துவிழும்
மண்வீடும் நானுமானேன்.
கொஞ்சிக்குலாவிய குடும்பபந்தம் இடிந்தது. ஐயோ
கஞ்சிக்கும் வழியின்றி பரதேசியானேன்.

கொள்ளிகுடமுடைக்கப்பிள்ளையில்லை என்னை

ஓடிவந்து கூப்பிட உதவியில்லை.
வேங்கைகளைப் பெத்த வயிறு வேகுதையோ
வேதனைதணிய கானகப் பருந்தவந்து என் உயிர்காவுமெப்போ.

காதல் பரிசு

காதல் பரிசு

அவளதுகனவோடையில்

நீந்திநீளத்துயின்றஅந்நாளில்

எனக்கோர் ஆசையிருந்தது.
மீசைஅரும்பத்துடிக்கும்

இளவேனில் பருவத்தில்

எல்லோருக்கும் அதுதான் வரும்.

பூசைநேரமணியோசையிலோ

கோபுரதரிசனத்திலோகடவுள் நினைவுக்குவருவதுபோல

அவள்நினைவைநான் தின்னவில்லை.


எல்லாம் அவளாகிய“ஏகம் சத்”

தத்துவந்தான் அன்று

எனக்குள் ஒலித்தகீதை.


எனக்குள் அன்றுஅவள் உறைந்திருந்ததுபோல்

அவளுக்குள் நானிருந்தேனென்பது

அவள் என்னை இறுகப்பிடித்துப் பருக்கியமுத்தம்

இன்றும் சத்தியம் செய்கிறது.


நீரோடைபோல் அவள் முழுவதும்

சலசலத்தஎன்னைஅவளேசுருக்கிச் சுருக்கி

சுருக்கிட்டுகொலைசெய்ததை

அவளுக்குள் நான் செத்துநாறியபோதுஅறிந்தேன்.


இப்போதுஎனக்குள் இருந்த ஆசை

பாட்டனைப் பயமுறுத்தியபேய் பிடித்தகிழட்டுஆலமரத்தின் கீழ்

பைத்தியம் பிடித்துகுந்தியிருப்பதுஅவளுக்குத் தெரியாது.
மேரா

Thursday, January 31, 2013

துரோகம்


கறையான் கட்டிய புற்றில் நேற்று 
 கொடும் அரவம் நுழைந்தது.
 மழை,வெயில்,பணியென 
காலங்களுக்கு வளைந்து நின்று 
கட்டிய வீட்டை பறிகொடுத்த சோகம் மனதில் படிய
 நிற்குமதன் யோசனையெல்லாம் 
 புற்றில் அரவம் நுழைய வழியேன் வைத்தோமென்பதுதான்.

Tuesday, August 28, 2012

பற்றியெரியும் மனக்காடு¬¬- சொல்லும் செய்திகள் (போர்க்குணம் கொண்ட கவிஞன் மேராவின் “மனக்காடு” கவிதைத் தொகுப்பை முன்வைத்து) -த.சேரலாதன்(ஆசிரியர்)


 

ஈழத்து கவிஞர்களின் அடக்குமுறைக்கெதிரான குரல் ஓய்ந்து போன தறுவாயில் சமகால இருப்பின் அசாத்தியத்தைப் பட்டவர்த்தமாக வெளிப்படுத்தும் தற்துணிவுடனும்;, அடக்கப்பட்ட மக்களின் கொந்தளிக்கும் மனப் போராட்டத்துக்கு வடிகாலாகவும், இன்னும் கொடுமை கண்டு கொதித்தெழும் மனிதருக்கெல்லாம் ஆத்ம திருப்தி தரும் வகையிலும்மனக்காடுதொகுப்பு மட்டக்களப்பு படுவான்கரை மண்ணிலிருந்து வெளிவந்திருப்பது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் எனலாம்
                          அண்மையில் அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மண்டபத்தில் அரசையூர் மேரா (. மேகராசா) வின்மனக்காடு கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு மட்டக்களப்பு மண்ணுக்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது என்பதை மேராவின் கவிதை உள்ளடக்கம் வெளிக்காட்டுகின்றது
                             ‘யுத்தம் தீண்டிய ரத்த உறவுகளின் நினைவால் மீண்டும் மீண்டும் இறக்கும் உறவுகளுக்கு தனது கவிதை நூலினை அர்ப்பணம் செய்யும் மேரா- “மரணத்துள் வாழ்வோம் என்பதன் மறுபக்கத்தின் குறுக்கு வெட்டு முகமாகிறான். “சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வருக  என அழைத்த சேரனின் அறைகூவலின்  எதிரொலியாகின்றான். இன்னும் மூடிமறைக்க முடியாதவைகளை மூடிமறைக்கும் முகமூடிகளின் உடைத்தெறிவுக்கு முதற்படியாகின்றான்.                                                                                                        
                           “நிலைபேறு எனும் கவிதையினூடாகமரணத்தின் எல்லையைத் தாண்டியும் பிழைக்க விரும்பும் கவிஞன் - புதிய மரண விசாரணையில் அரச அதிகாரத்தின் இருபக்கப் போலி அரசியலை புட்டுக்காட்டும் தைரியம் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

            “உயிர் காக்கும் பணியில்              
;             உயிரிழப்புக்கள் தவிர்க்க முடியாதென
             மரண விசாரணை
             முடக்கப்பட்டது
பல்லிகளைக் கொல்லாதீர் என அறிவிக்கும் அரச வாகனம் ஏற நடுவீதியில் பிணமாய்ச்சரிய மரண விசாரணை முடக்கப்படÉ மீண்டும் பல்லிகளைக் கொல்லாதீர் என்ற அறிவிப்புடன் அரச வாகனம் நகர்ந்தது எனக் குறிப்பிடும் கவிஞன் தனது குறியீட்டுப் படிமத்தின் மூலம் அதிகாரத்துக்கெதிரான குரலை ஆக்ரோசமாக முன் வைப்பது கவிஞர்களுக்கே உரிய போர்க்குணத்தையும் வீரத்தையும் வெளிக்காட்டுகிறது.
               “இரத்த வாடையில்
               ஊறித்திளைத்த
               சுடலைப் பேய்களின்
               நடமாட்டம்
               வாழ் நிலமெங்கும்
               நெருசலாக
               கூடி வாழ்ந்த கோபுர வாசல்
               நரபலியெடுக்கும்
               பலிமேடாய் மாறிய காலம்
  அந்த நரபலிக் காலத்தில் வாழ்வின் அசாத்தியத்தன்மையும் கொடுரமும் குறிப்பிடப்படுகிறது.
                     எமக்கென இருந்தவர்கள் இழக்கப்படும்போது எழும் வேதனைமேராவின்ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கையில் தெரிகிறது.
                “எனக்குள்
                 எப்போதும் இருக்கும் என் நண்பன்
                 இனி ஒரு போதும் வரமாட்டானென்று
                 இப்போது எனக்கு
                 உறுதியாகத் தெரியும் 
எனும் போதுஎம்மையும் ஒரு நிமிடம் கலங்க வைக்கிறது.     
              ;எல்லாக் கொடுமைகளையும் இயற்றிவிட்டு மந்திரப் புன்னகை புரியும் நயவஞ்சகத்தனத்தை எதிர்க்கும் கவிஞன் - எங்கள் மனம் பற்றி எரிகையில் - (பத்திரகாளியம்மன் முன்றலில் பற்றி எரியும் தீக்குழியை வட )எரியும் நெருப்பில் எண்ணையூற்றும் உன் புன்னகை இனியும் வேண்டாம் என எதிர்த்து நிற்கிறான்.
                   எதிர்த்தல் கவிஞனின் சுதந்திரம் என்பதற்கமைய இரவுகளைக் கொழுத்திவிட்ட அராஐன் முறுக்கேறிய திமிரோடு கால அதிஸ்டம் கை கூட அறுவடையை நிறைவேற்றியதைதீண்டும் நாள் வரும் எனும் கவிதையில் சொல்லும் மேரா, இனிமைகளைப் பறிகொடுத்தழும் பனிமழையாய் முள்வேலிக்குள்ளே கிடந்து உள்ளத்தில் வேர்த்தெழும் என் பக்கம் தெய்வம் நின்று கொல்லும் என்பது போல உன்னை நிச்சயம் தீண்டும் என்னும் எச்சரிக்கையையும் விடுக்கத் தவறவில்லை.
                    யுத்த அரக்கன் செய்த கொடுமைகளைத் தாங்கிதுயர்ப் படுக்கையில் சுனாமி என்னும் கோரத்தாண்டவம் அரங்கேறியமையினை – “நூற்றியொராவது தீண்டல் காரன் கவிதை கோடிட்டுக்காட்டுகிறது.
                    “முன் பின் யாரும் வரலாம்
                    ஏறி மிதி
                    காமாட்சி மீனாட்சி
                    காடேறி வைரவர் எல்லோரும்
                    அவரவர் உயிர் தப்பிக்க…….
                    இனி என்ன
                    நாறிப் பொசுங்கட்டும் ஊருலகு.”
என்று கூறும் போது மக்களின் அவலத்தை மனக்கண் முன் நிறுத்தும் விதம் வியத்தற்குரியது. சுனாமியின் கொடுரத் தன்மையினை விளக்கும் வகையில் மேரா கையாறளும் படிமங்கள் அமைந்துள்ளன.
                    'வாழ்பதி சிதைத்து
                     வழி மரபு உடைத்து
                     பலி வேட்கை தீர்த்த
                     கலி கால பிரசவத்தின்
                     நான்காவது உலக
                     ஏவுதல் பேய் அவன்"
Áறாவது தீண்டல்காரன் எனும் கொடிய சுனாமியை ஒரு ஏவுதல் பேயாக காட்டுகிறான் மேரா.நமது இழப்புக்கள் ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்புக்கள் என்பது 'உன்னால்  திருப்பித் தரமுடியாது" என்னும் கவிதையில் வெளிப்படுத்தப்படுகின்றது.
                      'பாட்டன் நட்டு வளர்த்த தென்னந்தோப்பை
                      பட்டம் பெற்று வேலைக்காய் காத்து நின்ற
                      என் நண்பனை
                      திட்டம் போட்டு இடிக்கப்பட்ட
                      ஊர்க் கோயிலை
                      இன்னும்அனைத்தையும்
                      எப்படி உன்னால் திருப்பித் தர முடியும்"
குறியிட்டுப் பாணியில் கவிதை அமையும் போது அது பல தட்டு அர்த்தங்களை தோற்றுவித்து வாசகனின் உணர்வு நிலைக்கும்,அனுபவத்திற்கும் ஏற்ற வகையில் புரிதலுக்குள்ளாதல் யதார்த்தமானதாகும்.அந்த வகையில் 'உயிர் வலி" என்னும் கவிதையானது ஒரு மரத்தினைக் குறியீடாகக் கொண்டுள்ளதுடன் மரத்தின் மூலம் பல அர்த்தங்கள் வெளிக்காட்டப்படுகின்றன.
                      'நினைவிலும் கனவிலும்
                      இரவிலும் பகலிலும்
                      உயிர் வலி கனத்தெழ
                      இப்போதும்
                      தன்னை அச்சுறுத்தும்
                      கொடிய காற்றில் சிக்கி
                      நெளிகிறது
                      சரிகிறது
                      தடுமாறுகிறது அந்த மரம்"
எம் மக்கள் படும் இன்னல்களையும்;;;;;;;;;,; அனுபவிக்கும் கொடுமைகளையும் அவலங்களையும் கண்டு மனம் வருந்தும் கவிஞருக்கு கடவுளர் மீதும் வெறுப்பு ஏற்படுவது இயற்கை – “காத்திருப்பு என்னும் கவிதையில்
கடவுளின் அஞ்ஞாத வாசம்
இன்னும் முடிவதாயில்லை ------
கடவுள் இல்லாத இடைவெளியில் பலர்
உலகத்தைப் படைக்கத் தொடங்கி விட்டனர்"
என்று ஆதங்கப்படும் அதேவேளை 'கடவுள் பற்றிய  சந்தேகங்கள்" வலுப்பெறுகின்றன.
                'யுத்த அரக்கனை
                எதிர்க்கப் பலமின்றி
                ஓடி மறைந்த கடவுளருக்கு
                சொந்தப்பதியி;ல் மீளக்குடியமர
                துளியும் ஏனோ
இன்னும் துணிவு வரவில்லை……..
என் கனவுகளில்
கருக் கொள்ளும் கடவுளர்களை
யாரோ கொலை செய்து கொண்டிருக்கின்றார்கள் "
நாடு நாடாய் இல்லாமல் நடைப் பிணமானதை மனக்காடு நன்றாய் கவிதையுரைக்கிறதுஎன்னவோவெல்லாம் சாதனைகள்É எங்கெல்லாமோ நடந்து கொண்டிருக்க நமது நாட்டில் அழிவின் உச்ச எல்லையில் சாதனை படைக்கும் அதிகாரத்துவத்தின் நரபலிச் சாதனை கேள்விக்குள்ளாகின்றது. “ஆராய்ச்சியாளனின் முன்திட்ட யோசனைக் கசிவு  நாட்டில் நடக்கும் அகோர அழிவை படம் பிடிக்கும் கவிதையது.
                   “அலையடிக்கும் இரத்தக் கிணறுகள்
                    அடுக்கடுக்காய் நிலக் கீழிருக்கும்…….
                    மனிதப் புதை குழிகளால்
                    புதையுண்ட நகரங்களின் முதன்மைக்கான
                    கின்னஸ் சாதனையும்
                    நமக்கே திண்ணம்……..
                    ஆராய்ச்சியாளர்கள் பலர்
                    காணாமல போவர்
                    தனித்தனியாக அவர்களுக்கு
                    பாராட்டு விழா நடைபெறும் 
      நாய் எனும் குறியீட்டினூடாக இரண்டுவிதமான மனிதர்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றான் மேரா. இரங்கத்தக்கவர்கள் ஒன்று. வெறுக்கத்தக்கவர்கள் மற்றது. “அந்த நாய்க்கு அடிக்காதீர் கவிதையும்  “சந்தி நாய் கவிதையும் ஒப்பு நோக்கிக் கூறத்தக்கவை.
                                                                உள் வீட்டுப் பண்டத்தை
                                                                ஊரார்க்கு முகர்ந்து காட்டி
                                                                உண்ட வீட்டுக்கு
                                                                இலண்டகம் செய்யவும் இல்லை   
 இது ஒருவகை நாய். ஆனால் சந்தி நாயோ:
                                                                “வேட்டைப் பற்களை
                                                                கடைவாயில கிட்;டிக் கொண்டு
                                                                நாக்கு நீழ ஈரக்குலை பிடுங்கும்
                                                                கொலை காரனைப் போல்……..”
உலா வருகின்றது. இந்த நாய்க்கு யார் யாரோ விருந்தாகின்றனர். இத்தகைய இருநிலைப் படிமங்களுடன் நாய் என்பது காட்டப் படுகின்றது.
                அதிகாரத்துக்கெதிரான குரலின் மற்றொரு முனைப்பு ஆணாதிக்கத்துக்கு எதிராக பலமாக விழும் எதிர்ப்புக் குரல் கவிதைகளில் பரிணமிக்கின்றது.
                    “இன்னொருவனின்
                     மனைவியைக் கடந்தும்
                     இராவணர்களே…….”                                     
எனஎதிரொலியில் இதிகாசப் பாத்திரங்கள் படிமங்களாகின்றன. “கண்டெடுத்த வாக்கு மூலம் என்னும் கவிதையில்
                        “விதவையான என்னைத் தூற்றும்
                         விந்தை மனிதர்களின் நாவறுக்கவும்
                         துரத்தி வரும்
                         இந்திரர்களின் விழி எதிரே                                       
                         அகோரப் பேயாய்
                         ஆதி வடிவம் கொள்ளவும்
                         கற்றுக்கொடு
என வேண்டுவதன் மூலம் ஆணாதிக்க எதிர்ப்புக் குரல் மேலோங்குகின்றது. “வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைத்த விந்தை மனிதர்கள் இன்னும் நடமாடுவதை எதிர்க்கின்றார் கவிஞர் மேரா
                “மண்முனைக்குப் பாலம் கவிதைபடுவான்கரை மக்களின் அங்கலாய்ப்பினையும் எதிர்பார்ப்பினையும் அங்கதச் சுவையுடன் வெளிக்காட்டுகின்றது. அரசியல் வாதிகளின் பொய்த்திரைகளைகிராமத்துக் குரல் கவிதை கிழிக்கின்றது. தொழிலாளர்களின் மேன்மையினைகுமுறல் கவிதை கூறுகின்றது. தன்னுணர்ச்சிப் பாணியில் அதிகாரத் துஸ்பிரயோகத்தையும் அரசினதும் மக்களினதும் கண்டுகொள்ளாத் தன்மையினையும்ஒரு பணப் பேயும் நாலைந்து அடியாட்களும் என்னும் கவிதை உணர்த்துகின்றது.
                 போர்க்குணம் கொண்ட கவிஞர் மேரா என்பதை இத்தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் உணர்த்தினாலும்  - காதல் எனும் நூலிழை பற்றி கனிந்த உணர்வுக்கும் இட்டுச் செல்லத்தக்க ஓரிரு கவிதைகள் இத்தொகுப்பை அணிசெய்கின்றன. கிராமத்துக் காதலின் உயிரோட்டம் நெகிழ வைக்கின்றது. “உன் நினைவில் ஒரு நிமிடம் கவிதையில்:
தாந்தா மலை
ஊர்த் திருவிழாவில்
தாவணியோடு அழகாய்- நீ முன் செல்ல
பூவாளிச் சாரனுடன் - உன்
பின்னால் நான் சுற்றியது..”
வீர விதையானவள் நீ கவிதையிலும்;;
சாமிக்கெல்லாம் நேர்ந்தேனடி
சாகக்கூடா நீ என்று - இன்று
நெஞ்சில் குண்டு பட்டு
நேரிலையே நீ இறந்தனையே

கிராமத்துக் கீதம் தவழ்கிறது: காதல் வேதனை கச்சிதமாய் வந்துஅன்றைய நீ அழகானவள் கவிதையில் பின்வருமாறு அமைகின்றது-
                   “ காற்றுப் போல திசைமாறும் நீ
                     நேற்றுப்போல் இன்றில்லை
        தனித்துத் திரியும் பெண்கள்: கைவிடப்பட்ட பெண்கள் மீது கொண்டுள்ள ஏக்கம் - அற்புதம். அக்காவைப் பற்றிஅவள் என்னும் கவிதை கூறும் போது வெளிவருகிறது.
                          “கிறுகி நிலம் கிண்டி
                           கிறு கிறுத்தவள் போல
சுளிக்காற்று நடை நடந்து
மீண்டும் குனிந்து
                           தலை சொறிந்து
                           வார்த்தை விழுங்கி
                           என்னைப் பார்த்து அவள் ஒதுங்கினாள்
இத்தகைய பெண்கள் மீது கொண்ட ஏக்கம்
                               “….. சடசடத்தது பெருமழை
                                    என் செய்தாளோ அவள்
                                    அன்றிரவும் அவள் நினைவே
எனும் வரிகள் மூலம் வெளிப் படுகின்றது.
         ஒட்டுமொத்தமாகமேராவின்மனக்காடு  போர்க்கால வாழ்வியலின் நெருக்குதலையும் - சமகால வாழ்வியலின் இருப்பின் அசாத்தியத்தையும் - காதல் எனும் புனித உணர்வினையும் - அது புதைக்கப்பட்ட தருணங்களையும் - ஆணாதிக்க எதிர்ப்பையும் அவலங்களின் கணங்கள் தரும் சோகத்தையும் தொட்டுக்காட்டித் துலங்க வைக்கின்றது.